[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 08 Mar, 2019 08:42 am
  • அ+ அ-

மேஷம்: சுபச் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள், விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். அநாவசியப் பேச்சுகளைத் தவிர்த்து நிதானமுடன் செயல்படுவது நல்லது

ரிஷபம்: ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்து கொள்வார்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டு.

மிதுனம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். மனைவிவழி உறவினரால் நன்மை உண்டு.

கடகம்: செல்வாக்கு அதிகரிக்கும். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில்  வேலை அமையும். சகோதரி உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார். பணவரவு உண்டு.

சிம்மம்: எதிர்மறை விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து போகும். பணம், நகையை கவனமாகக் கையாளுங்கள். நிதானத்துடன் செயல்படுவது பிரச்சினையைத் தவிர்க்கும்.

கன்னி: மனோபலம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்பீர்கள்.

துலாம்: பழைய இடத்தை விற்று புதுவீடு வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். திடீர் பயணம் உண்டு.

விருச்சிகம்: வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். விலகியிருந்த உறவினர்கள் தேடி வருவார்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தனுசு: பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பூர்வீகச் சொத்தை உங்கள் பெயருக்கு மாற்றுவீர்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 

மகரம்: தாயாரின் உடல்நலம் சீராகும். வீடு கட்ட அரசு அனுமதி கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை புரிந்து கொண்டு வலிய வந்து உதவுவார்கள். பண வரவு திருப்தி தரும்.

கும்பம்: வீடு, மனை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி ஒற்றுமை பிறக்கும். சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். 

மீனம்: முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வீண் சந்தேகம், தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். யாருக்காகவும் உத்தரவாதமோ, சாட்சிக் கையெழுத்தோ போட வேண்டாம்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close