[X] Close

4 ஆண்டு தாமதத்துக்கு பின் கும்பாபிஷேகம்: சேலம் திருமலைகிரியில் மூலவர் மீது படர்ந்த சூரிய ஒளி


kumbabishekam

  • kamadenu
  • Posted: 07 Mar, 2019 12:45 pm
  • அ+ அ-

சேலத்தை அடுத்த திருமலைகிரியில் உள்ள பழமையான ஸ்ரீசைலகிரீஸ்வரர் கோயிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படர்ந்தது. இக்காட்சியை பக்தர்கள் பார்வையிட்டு பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

சேலத்தை அடுத்த திருமலைகிரியில் பழமையான ஸ்ரீசைலகிரீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்கள் உள்ளன. மிகவும் தொன்மையான இக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு கும்பாபிஷேகம் விழா வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோயில்களுக்கு சீல்ஆனால், இருதரப்பினர் இடையில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், கும்பாபிஷேகம் நிறுத்தப்பட்டது. மேலும், கோயில்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து வழக்கு திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து, கடந்த 4-ம் தேதி இரு கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கோயில் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படர்ந்து, சுவாமியை பொன்னிறமாக்கி அலங்கரித்தது.

சிவபெருமானை சூரியன் தன் கதிர்களால் அபிஷேகம் செய்வதுபோல இருந்த இந்த அரிய காட்சியை ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டு, சுவாமியை வழிபட்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close