[X] Close

பெரம்பலூரில் சுட்டெரித்த வெயில்: மக்கள் அவதி


  • kamadenu
  • Posted: 23 Mar, 2019 10:13 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். பயணத்தினால் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.சொத்துக்களை வாங்கும் முயற்சிகள் பலனளிக்கும்.

தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். 

உத்தியோகத்தில் புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். 

குடும்பத்தில்பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்குள் திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். 

பெண்களுக்கு, திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள்.மனோதிடம் கூடும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.அரசியல்வாதிகளுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்க  வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி  பெற எடுக்கும் முயற்சிகள் பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி திசைகள்: மேற்கு, தென்மேற்கு நிறங்கள்: வெள்ளை எண்கள்: 2, 5, 6  பரிகாரம்: மஹாலக்ஷ்மிக்கு மஞ்சள் வஸ்திரம் அர்ப்பணித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் வரும்.

****************************************************************************************************************************************************

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும்.  சில்லறைப்  பிரச்சினையைச் சமாளிக்க வேண்டி இருக்கும். 

தொழில், வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். 

உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். அலுவலகப் பணிகளை கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது.குடும்பத்தில் நிம்மதி  குறையும்படி ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன் மனைவிக்குள் மன வருத்தம் ஏற்படலாம். 

பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன்னர் தீர ஆலோசனை செய்வது நல்லது. கலைத் துறையினருக்கு முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம்.  

அரசியல்வாதிகளுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். சிறப்பான பலன்  கிடைக்கப் பெறுவீர்கள்.   மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய் திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம் எண்கள்: 2, 9 

பரிகாரம்:மருக்கொழுந்தை அம்மனுக்கு சாற்றி வழிபட்டு வர குழப்பங்கள் நீங்கும். ****************************************************************************************************************************************************

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் காரிய தாமதம் நீங்கும். அடுத்தவரை நம்பிப் பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும்.  ஏற்கனவே பாதியில் நின்ற பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். விருப்பத்துக்கு மாறாக  சில காரியங்கள் நடக்கலாம். எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. 

குடும்பத்தில் சந்தோஷமான மனநிலை நிலவும். மனம் விட்டுப் பேசியெடுக்கும் முடிவுகள் நன்மை தரும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள்,  நண்பர்கள் உதவி புரிவார்கள்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத  சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். அலுவலகத்தில்முக்கியப் பொறுப்பு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  

பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு துணிச்சல் பிறக்கும். காரிய வெற்றிக்குத்  தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் இடமாற்றம், பதவி இறக்கத்தைச் சந்திப்பார்கள்.மாணவர்களுக்கு, கல்விச் செலவு உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி திசைகள்: கிழக்கு, தென்மேற்கு நிறங்கள்: வெள்ளை,மஞ்சள் எண்கள்: 1, 3, 6    பரிகாரம்: சிவன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்வது மன அமைதியைத் தரும்.

****************************************************************************************************************************************************

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் சகோதரர்களால்  நன்மை உண்டாகும்.பணவரவு எதிர்பார்த்தபடி  இருக்கும். வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது கவனம் தேவை. 

தொழில்,வியாபாரத்தில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள்  கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை  சந்திக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும்.கணவன் மனைவிக்குள் சுமுக உறவு இருக்க விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். அரசியல்வாதிகளுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு போராட்டங்கள் ஏற்படலாம்.சிலருக்கு பதவிகள் கிடைக்கும். 

கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.பணிச்சுமை ஏற்படும். பெண்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். 

மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி திசைகள்: தெற்கு, தென்மேற்கு நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை எண்கள்: 2, 5, 6  பரிகாரம்: விநாயகரை வணங்கி வர காரியத் தடை நீங்கும்.

****************************************************************************************************************************************************

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் .எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.உங்களது பேச்சை மற்றவர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள்.  எந்த ஒரு காரியமும் இழுபறியாக இருந்து முடிவில் சாதகமான பலன்தரும். வீட்டை விட்டு வெளியே தங்க நேரலாம். 

தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகாரிக்கும். வேலைப்பளு குறையும். திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பெண்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். கலைத் துறையினர் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும். 

அரசியல்வாதிகள் அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும்.நீண்டதூரத் தகவல்கள் நன்மையாக இருக்கும்.

மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பது வேகம் பெறும். விளையாட்டில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி திசைகள்:மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு நிறங்கள்: நீலம்,பச்சை எண்கள்: 2, 6  பரிகாரம்: பைரவருக்கு செவ்வரளி சாற்றி வழிபட்டு வர கடினமான பணிகளும் எளிதாகும். தைரியம் அதிகரிக்கும்.

****************************************************************************************************************************************************

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம்  எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளைச்  சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. 

தொழில், வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். 

உத்தியோகத்தில் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும்.  அலுவலகப் பணிகளால் பதற்றம் உண்டாகும். அக்கம்பக்கத்தினருடன் சில்லறைச் சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.அரசியல்வாதிகளுக்கு அனுகூலமாக இருந்தாலும் பற்பல சோதனைகளைக் கடக்க வேண்டும். 

கலைத் துறையினருக்கு பல்வேறு வகைகளில் அனுசரணை இருக்கும். வெளிநாடுகள் சென்று வருவீர்கள்.பெண்களுக்கு, அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு, கல்வியைப் பற்றி பதற்றம்ஏற்பட்டு  நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன் திசைகள்: வடக்கு, வடமேற்கு நிறங்கள்: வெள்ளை,மஞ்சள் எண்கள்: 1, 3  பரிகாரம்:  குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரவு இருக்கும். *****************************************************************************************************************************************

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close