[X] Close

முதுகுவலியால் அவதிப்படுகிறீர்களா?


  • kamadenu
  • Posted: 23 Mar, 2019 10:08 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் அதிர்ஷ்டம் நிகழும். நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.  புத்திசாதுரியத்தால்  அனைத்துத் தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எந்த ஒரு பிரச்சினையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். தந்தைவழியில் உதவி இருக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 

தொழில், வியாபாரத்தை  விரிவாக்க முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நெடுநாட்களாக நிலுவையில் இருந்த உங்கள் திட்டத்தை மேலதிகாரிகள் அமல்படுத்துவார்கள். 

பெண்களுக்கு, திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.கலைத் துறையினருக்கு கடன்  விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் உண்டு. 

அரசியல்வாதிகள் கோபமாகப் பேசுவதை தவிர்க்க வேண்டும்.  மேல்மட்டத்தினருடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு, சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்,வியாழன் திசைகள்: கிழக்கு, தெற்கு நிறங்கள்:ஆரஞ்சு, நீலம் எண்கள்: 5, 7, 9  பரிகாரம்:குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்ப பிரச்சினை தீரும். ****************************************************************************************************************************************************

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்த ஒரு காரியத்திலும் இருந்த தடுமாற்றம் நீங்கும். அதே வேளையில் மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையால் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரவு திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். 

தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும்.கடன் தொல்லை தலைதூக்கலாம். உத்தியோகத்தில் கூடுதல்  பணிச்சுமை,  இடமாற்றம், அலைச்சல் இருக்கக்கூடும். தடைபட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.  

குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும்.பெண்களுக்கு எதிலும் தேவையற்ற  கவலை உண்டாகும். கலைத் துறையினருக்கு எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும்.அரசியல்வாதிகளுக்கு,  மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மாணவர்கள் மிகவும் கவனமாகப் பாடங்களைப் படிப்பது அவசியம். சக மாணவர்களுடன் நிதானமாகப் பழக வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி திசைகள்:மேற்கு, தென்மேற்கு நிறங்கள்: வெள்ளை,வெளிர்நீலம் எண்கள்: 2, 6 பரிகாரம்:மகாலட்சுமியைப் பூஜிக்க பணப் பிரச்சினை நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.

***************************************************************************************************************************************************

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.சுணக்க நிலை நீங்கும். வீண்பழிகள் மறையும்.சில்லறைச் சண்டைகள் சரியாகும். 

குடும்பத்தில் அமைதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருந்ததடைகள் நீங்கும். புதிய வர்த்தக ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். விண்ணப்பித்திருந்த உரிமங்கள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் மிகவும் கவனமாகப் பணிகளை மேற்கொள்வது நல்லது. மேலதிகாரிகள், சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.  வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். வெளியூர்ப் பயணங்கள் இருக்கும்.  பெண்களுக்கு, எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சேமிப்புகள் உயரும். 

கலைத் துறையினரின் கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகள் கோபமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கிப் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன் திசைகள்:மேற்கு, வடகிழக்கு நிறங்கள்: பச்சை, மஞ்சள் எண்கள்: 3, 5  பரிகாரம்: பெருமாளுக்கு துளசியை அர்ப்பணித்து தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட குழப்பம் நீங்கி மனநிம்மதி கிடைக்கும். சொத்துப் பிரச்சினை தீரும்.

****************************************************************************************************************************************************

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள்,உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம்.காய்ச்சல், சிரங்கு உண்டாகலாம். காரியங்கள் தாமதமானாலும் வெற்றிகரமாக நடக்கும்.  

தொழில், வியாபாரத்தில் இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி குறித்த சிந்தனை எழும், உத்தியோகத்தில் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு,பதவி உயர்வு கிடைக்கும். 

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில்  குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். பெண்களுக்கு, பணவரவு திருப்தி தரும்.

 கலைத் துறையினருக்கு, பேச்சில் இனிமை, சாதுரியத்தால் எடுத்த காரியம் கைகூடும்.அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த காரியங்கள் முடிய கடினமாகப் பணியாற்ற வேண்டி இருக்கும்.மாணவர்களுக்கு, கல்வி முயற்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன் திசைகள்:வடக்கு, வடமேற்கு நிறங்கள்: வெள்ளை,வெளிர்பச்சை எண்கள்: 2, 5  பரிகாரம்: அம்மனை வணங்கி வர எல்லா காரியங்களும் நன்மையாக நடக்கும். ****************************************************************************************************************************************************

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் மற்றவர் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.பணவரவு தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும்.தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். தைரியம் பிறக்கும். வாக்கு வன்மையால் ஆதாயத்தைப் பெறுவீர்கள்.உயர்மட்டப் பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். 

தொழில், வியாபாரத்தில் கூடுதல் செலவைச் சந்திக்க நேரிடும். சக  ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.குடும்பத்தினர் சொல்வதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. மன அமைதி கிடைக்கும்.பெண்கள் கோபத்தைக் குறைத்து நிதானமாகப் பேசுவது பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். 

கலைத் துறையினர் விடா முயற்சியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன்களைப் பெறுவீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு  புத்தி தெளிவு ஏற்படும்.மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும்போது  கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்,வெள்ளி திசைகள்: கிழக்கு, தெற்கு நிறங்கள்:வெள்ளை, மஞ்சள் எண்கள்: 1, 3, 6  பரிகாரம்: சிவனுக்கு எலுமிச்சைச்சாறு அபிஷேகம் செய்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். ****************************************************************************************************************************************************

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் வரும் பணவரவு மனமகிழ்ச்சியைத் தரும். நீண்டநாள் பிரச்சினை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு நிகழும்.வாக்கு வன்மையால் நன்மை ஏற்படும். நோய் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். 

தொழில், வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளைச்  சந்திக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் புதிய  பொறுப்புகள் வரும்.சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாகப் பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். குடும்ப  விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். வாகன வசதி உண்டாகும்.

பெண்களுக்கு, அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும். கலைத் துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில்  இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.மேலிடத்துடன் நெருக்கம் அதிகரிக்கும்.மாணவர்களுக்கு,  பதற்றம் கொள்ளாமல் நிதானமாகப் பாடங்களைப் படிப்பது நல்லது.சகமாணவர்களால்  அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன் திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு நிறங்கள்: பச்சை, மஞ்சள் எண்கள்: 2, 3, 5 

பரிகாரம்:ஆஞ்சநேயரைத் தரிசித்து வணங்கிவர எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close