[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 07 Mar, 2019 08:32 am
  • அ+ அ-

மேஷம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். திடீர் பயணம் உண்டு.

ரிஷபம்: உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும்.

மிதுனம்: கோபத்தைக் கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழிகளை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். திட்டமிட்டக் காரியங்கள் கைகூடும். பணவரவு திருப்தி தரும்.

கடகம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். முக்கியக் காரியங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

கன்னி: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவரிடம் சொல்லி மகிழ்வீர்கள். உங்களைத் தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மனம் மாறும்.

துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. ஆடை, ஆபரணங்கள் சேரும்.

தனுசு: கம்பீரமாகப் பேசி காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் திகழ்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

கும்பம்: மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். பணப்பற்றாக்குறையை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

மீனம்: முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். உடல்நலத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளால் சேமிப்பு கரையும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close