[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 06 Mar, 2019 08:41 am
  • அ+ அ-

மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வீடு, மனை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கு மீண்டும் கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

ரிஷபம்: சமயோசிதமாகச் செயல்பட்டு முன்னேறுவீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும்.

மிதுனம்: அனுபவ அறிவால் காரியங்களைச் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: சிறுசிறு அவமானங்கள், வீண் விரையம் ஏற்படக் கூடும். யாருக்காகவும் சாட்சி, உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அளவுடன் பழகுங்கள்.

சிம்மம்: மனோபலம் அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கவுரவிக்கப்படுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

துலாம்: சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும்.

விருச்சிகம்: நிர்வாகத் திறன் அதிகரிக்கும். ஓரளவு பணம் வரும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தாரின் ஆதரவு உண்டு. பிள்ளைகளின் மனதில் நிலவிய பயத்தைப் போக்குவீர்கள்.

தனுசு: வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்று மொழி பேசுபவர்கள் அறிமுகமாவார்கள். திடீர் பயணம் உண்டு.

மகரம்: உங்கள் பேச்சில் கனிவும் கருணையும் மிளிரும். பிரபலங்களின் உதவியால்  காரியங்களை முடிப்பீர்கள். கைமாற்றாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

கும்பம்: வேலைச்சுமை கூடும். நண்பர்களுடன் நெருடல் ஏற்படக் கூடும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தால் அலைச்சல் உண்டு.

மீனம்: வீண் சந்தேகம், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை யாருக்கும் இரவல் தர வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு மிகவும் அவசியம். 

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close