[X] Close

அனைவரும் வாக்களிக்க நடிகர் சல்மான் வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 22 Mar, 2019 07:56 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

நாளை 6.3.19 ம் தேதி புதன்கிழமை, வாஸ்து பூஜை செய்ய உகந்த நாள். வாஸ்துவுக்கு உ ரிய நன்னளில், மறக்காமல் விளக்கேற்றி, பூஜை செய்யுங்கள். வீட்டின் திருஷ்டி விலகிவிடும். தரித்திரம் அகலும்.

குடியிருக்கும் இல்லம் என்பது, வாஸ்து அமைப்பின்படி கட்டமைத்திருப்பது முக்கியம் என மனையடி சாஸ்திரங்கள் விளக்குகின்றன. ‘என்னவோ தெரியலீங்க. அந்த வீட்லேருந்து இந்த வீட்டுக்கு குடிமாறி வந்ததுலேருந்து படுத்தியெடுக்குது. எவ்ளோ சம்பாதிச்சாலும் காசே தங்கமாட்டேங்கிது’ என்று பலரும் புலம்புவார்கள், நாமே கூட புலம்பியிருப்போம்.

அதேபோல், ‘இந்த வீடு எங்களுக்கு ரொம்பவே ராசியான வீடு. அதனாலதான், தண்ணிப்பிரச்சினை, வாடகை அதிகம், வேலைக்குப் போற இடம் தூரம்னு இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிட்டிருக்கோம். இங்கே வந்ததுலேருந்துதான் நாலு காசு சேக்க முடியுது. எப்ப பாத்தாலும் ஆஸ்பத்திரி, மருந்து, மாத்திரைன்னே இருந்ததும் இப்போ மாறிருச்சு. பசங்க படிப்புல மந்தமா இருந்தாங்க. இப்போ நல்லாப் படிக்கிறாங்க. முன்னாடிலாம் எங்க வீட்டுக்காரரு, எதுக்கு எடுத்தாலும் எரிஞ்சு விழுந்துக்கிட்டே இருப்பாரு. இப்ப டென்ஷன் இல்லாம நிம்மதியா இருக்கோம்’ என்று பட்டியலிடுவார்கள்.

சொந்த வீடோ, வாடகை வீடோ... எதுவாக இருந்தாலும் அங்கே வீடானது வாஸ்துப்படி இருக்கவேண்டும். வாஸ்துப்படி இருக்கிற ஜன்னலும் கதவும் ஷெல்ஃப்புகளும் ஸ்விட்ச் போர்டும் கூட, நம்முடைய குணாதிசயங்களே அசைத்துப்பார்க்கும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.

‘வாஸ்துப்படி இப்படி இருக்கணும். அப்படி மாத்துங்க’ என்று சொன்னால், வாடகை வீடாக இருந்தால் செய்யவே முடியாது. சொந்த வீடாக இருந்தால், அதுவொரு செலவு. ஆனால், வாஸ்துவுக்கு உரிய நாளில், உரிய வழிபாடுகளைச் செய்து வழிபட்டால், வாஸ்து பகவானின் அருளை வீட்டுக்குள் கொண்டுவரலாம் என்பது உறுதி.

நாளை 6.3.19 புதன்கிழமை. அமாவாசை. இந்த அற்புதமான நாளில், வாஸ்து பூஜை செய்வதற்கு உண்டான நேரமும் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. எனவே, வீட்டுப் பூஜையறை, சமையலறை முதலான இடங்களைச் சுத்தமாக வைத்திருங்கள். சமையல் மேடையை அலம்பி, கோலமிடுங்கள்.

வாசலில் உள்ள மிதியடியை நன்றாக தூசு தட்டுங்கள். தண்ணீரில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து, பிறகு பயன்படுத்துங்கள். பூஜையறையின் மேடையில் படிந்திருக்கும் எண்ணெய்ப்பிசுக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி சாம்பல் தூசு, சுவாமி படங்களின் ஓரங்களில் ஆடிக்கொண்டிருக்கும் ஒட்டடை முதலானவற்றையெல்லாம் சுத்தம் செய்யுங்கள்.

காலையில் எழுந்ததும் வீட்டு வாசலில், மாவிலையை தோரணமாகக் கட்டுங்கள் ((பிளாஸ்டிக் மாவிலை அல்ல). நாளைய தினம் வாஸ்து பூஜைக்கு உரிய நேரம் காலை 10.32 மணி முதல் 11.08 மணி வரை. எனவே அந்த சமயத்தில், வீட்டு பூஜையறையில் கோலமிட்டு, விளக்கேற்றுங்கள். சுவாமிப் படங்களுக்கு, விக்கிரகங்களுக்கு சந்தனக் குங்குமம் இடுங்கள். அந்தந்த தெய்வங்களுக்கு உரிய மலர்களைச் சூட்டுங்கள்.

குறிப்பிட்ட இந்த நேரத்துக்குள், வாயு மூலை, அக்னி மூலை, நிருதி மூலை என வீட்டின் எல்லாப் பகுதிகளிலும் சாம்பிராணிப் புகையை இடுங்கள். பிறகு கற்பூரம் ஏற்றி, சமையலறைப் பகுதி, அரிசி முதலானவை வைத்திருக்கும் அடுக்குப் பாத்திர, வாளிகள், பீரோ, குழந்தைகள் புத்தகங்கள் கொண்ட ஷெல்ஃப், அலமாரி, வீட்டு வாசல் முதலான இடங்களில் தீபம் காட்டி வேண்டுங்கள்.

சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு வழங்குங்கள். நாளைய தினம் அமாவாசை என்பதால், காகத்துக்கு உணவிடும் வேளையில், இந்த சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரியையும் காகத்துக்கு உணவாக இடுங்கள்.

மாலையில், வீட்டுப் பூஜையறையிலும் வாசலிலும் விளக்கேற்றுங்கள். குடும்பத்தார் அனைவரையும் நடுஹாலில் கிழக்குப் பார்த்தபடி அமரவைத்து, எலுமிச்சை, தேங்காய், பூசணியால் திருஷ்டி கழியுங்கள். பிறகு தெருமுனையில் அவற்றை போட்டுவிடுங்கள். எலுமிச்சையை நறுக்கி, நாலாதிசைக்கும் வீசலாம். தேங்காயை, பூசணியையும் சிதறுகாய் போல் தெருமுனையில், முச்சந்தியில் உடைக்கலாம். 

வீட்டின் திருஷ்டி அனைத்தும் விலகிவிடும். வீட்டில் இதுவரை குடிகொண்டிருந்த தரித்திரம் அகலும். சுபிட்சமும் ஐஸ்வரியமும் குடிகொள்ளும். சின்னச் சின்ன உபாதைகள் படுத்தியெடுத்த நிலையில் இருந்து ஆரோக்கிய நிலைக்கு மாறுவீர்கள். குடும்பத்தில் அமங்கலச் சொற்களால் அடிக்கடி நிகழ்ந்து வந்த வீண் சண்டை சச்சரவுகளுக்கு இடமே இல்லாமல் போகும். அமைதியும் சந்தோஷமுமாக ஆனந்தமாக வாழச் செய்து அருளுவார் வாஸ்து பகவான்!

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close