[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 05 Mar, 2019 08:37 am
  • அ+ அ-

மேஷம்: தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். கோயில் விழாக்களை முன்னின்று நடத்தி பாராட்டு பெறுவீர்கள்.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி பெருகும். பிரபலங்களின் உதவி கிடைக்கும். அவர்களின் துணையுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

மிதுனம்: வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவதில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத வகையில் அரசுப் பதவி கிடைக்கும். இழந்ததைப் பெறுவீர்கள். சமூக அந்தஸ்து உயரும்.

கடகம்: ஆன்மிகப் பயணம் செல்வீர்கள். தியானம், யோகா, ஆன்மிகம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களிடமிருக்கும் அலட்சியப்போக்கால் சில சிக்கல்கள் வர வாய்ப்பிருக்கிறது. 

சிம்மம்: தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். சகல வசதிகளுடன் கூடிய பெரிய வீட்டுக்கு குடிபுகுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

கன்னி: மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து அவர்களை ஒதுக்குவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அயல்நாட்டுப் பயணம் கைகூடும்..

துலாம்: தைரியம் பிறக்கும். மறைமுக எதிர்ப்புகளை சாதுர்யமாக வெல்வீர்கள். சமூகத்தில் பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

விருச்சிகம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தூக்கமின்மை விலகும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.

தனுசு: இளைய சகோதரர்களால் ஆதாயம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேற்று மதத்தவரால் நன்மை பிறக்கும். புது வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்: புதிய முயற்சிகளில் ஆர்வம் பிறக்கும். எப்பொழுதோ வரவேண்டிய பணம் இப்பொழுது வந்து உங்களுக்கு கைகொடுக்கும். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

கும்பம்: உடல்நலக்குறை, மனச்சோர்வு, பதற்றம் வந்துபோகும். உடன்பிறந்தவர்களிடையே எதிர்பாராத வகையில் மனக்கசப்பு வந்து நீங்கும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

மீனம்: சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்துவார்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close