[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 04 Mar, 2019 08:57 am
  • அ+ அ-

மேஷம்: பெரிய பொறுப்பு, பதவிகள் தேடிவரும். வீண் குழப்பம், கவலையில் இருந்து விடுபடுவீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். தொடங்கிய வேலைகள் தடையின்றி முடியும்.

 ரிஷபம்: திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடியும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பல வகையிலும் பணவரவு, பொருள் வரவு அதிகரிக்கும். 

மிதுனம்: திடீர் செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பேச வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை. ஆன்மிக நாட்டம் கூடும். 

கடகம்: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பழுதான வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

 சிம்மம்: எந்த தடைகள், பிரச்சினைகள் வந்தாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். இழுபறியாக இருந்த சில வேலைகள், முக்கிய நபர்களின் ஆதரவால் முடிவுக்கு வரும்.

 கன்னி: எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்கள் ஆதரவாக இருப்பார்கள். திடீர் பணவரவு, பொருள் வரவு உண்டாகும். 

துலாம்: நண்பர்கள், உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். பழைய இனிய சம்பவங்களை நினைத்துப் பார்த்து மகிழ்வீர்கள். எக்காரியத்திலும் நிதானம் அவசியம். 

விருச்சிகம்: பிரபலங்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் உண்டு. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளி மாநிலம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். 

தனுசு: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீண்டகாலமாக இழுபறியாக இருந்த பணம் கைக்கு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவரால் ஆதாயம் அடைவீர்கள். 

மகரம்: தாழ்வு மனப்பான்மைக்கு இடம்தராமல் நம்பிக்கையுடன் செயல்படுங்கள். யாரை நம்புவது, நம்பக்கூடாது என்பதில் குழப்பம் வரும். காசோலை விஷயத்தில் கவனம் தேவை. 

கும்பம்: வேலைச்சுமை கூடும். எந்த காரியத்தை தொட்டாலும் தடங்கலாகி முடியும். வெளியூர் பயணம், அலைச்சல், அசதி வரும். எந்த ஒரு காரியத்தையும் நேரடியாக முடிப்பது நல்லது. 

மீனம்: மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close