[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 03 Mar, 2019 08:25 am
  • அ+ அ-

மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்கள் உங்கள் மனதைப் புரிந்து கொள்வார்கள். 

ரிஷபம்: சாதுர்யமாக செயல்பட்டு காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிட்டும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை உண்டு.

 மிதுனம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்தபந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வாகனம் செலவு வைக்கும். 

கடகம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். திடீர் பயணம் உண்டு.

 சிம்மம்: சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் வெற்றி பெறும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். 

கன்னி: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

 துலாம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்தி கரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். 

விருச்சிகம்: மனதை குழப்பிக் கொண்டிருந்த நீண்டகால பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். 

தனுசு: மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் மற்றவர்க ளுடன் அனுசரித்துச் செல்வீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. 

மகரம்: பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டியது வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்க்கவும். 

கும்பம்: ஆடம்பர செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். மறைமுகப் போட்டிகளுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. 

மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதரர் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

Chat Conversation End

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close