[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 01 Mar, 2019 08:32 am
  • அ+ அ-

மேஷம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள், தடைகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். 

ரிஷபம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது பணப்பற்றாக்குறையும் வரும். இருப்பினும் சாமர்த்தியமாகச் சமாளித்து விடுவீர்கள்.

மிதுனம்: மனஇறுக்கம் குறையும். திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் பங்கேற்பீர்கள். பணவரவு உண்டு.

கடகம்: எதிரிகளை வீழ்த்தும் சாமர்த்தியம் உண்டாகும். கறாராகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான மின்சாதனங்களை மாற்றுவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கு பழைய சொத்தை விற்பீர்கள். சமூகத்தில் பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும்.

கன்னி: மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி திடமான முடிவுகள் எடுப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும்.

துலாம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். வரவேண்டிய பணம் இழுபறிக்குப் பின் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும்.

விருச்சிகம்: குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். 

தனுசு: பல சவால்கள், பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியது வரும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டாகும்.

மகரம்: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நவீன ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்: சுபநிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். நவீன ரக வாகனம், மின்சாதனங்கள் வாங்குவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மீனம்: கடின உழைப்பால் காரியங்களைச் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் நீங்கி அமைதி பிறக்கும். சமயோசிதமாகப் பேசி தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். திடீர் பயணம் உண்டு.

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close