[X] Close

இந்தவாரம் உங்களுக்கு இப்படித்தான்! பிப்ரவரி 28 முதல் மார்ச் 6 வரை (துலாம் முதல் மீனம் வரை)


indha-vaarm-ungalukku-ippadithan

  • kamadenu
  • Posted: 28 Feb, 2019 09:16 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் புத்திக் கூர்மையுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும்,மரியாதையும் கூடும். சுபச்செலவுகள் உண்டாகும்.தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாகப் பேசுவதால் வியாபாரம் நிலைபெறும். எதையும் ஆராய்ந்து பார்த்துச் செய்வது நல்லது.  உத்தியோகத்தில் எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுப்பீர்கள். புதிய வேலைக்கான முயற்சிகளைத் தொடங்குவீர்கள்.குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்.பெண்களுக்கு, மனதடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு இழுபறியாக இருந்த பிரச்சினைகள் குறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியவாதிகளுக்கு, எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும். மாணவர்களுக்கு,பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும். விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளியூர் செல்லலாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி திசைகள்:மேற்கு, வடமேற்கு நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் எண்கள்: 2, 6 பரிகாரம்: விஷ்ணு துர்க்கையை வழிபட்டு வர நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் புத்திக் கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனத்தில் தோன்றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். விவேகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். வர்த்தகஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் திறமையானசெயல்களுக்கு உரிய நற்பலனைப் பெறுவார்கள்.குடும்பத்தில் வாக்குவாதங்கள் உண்டாகலாம்.வாழ்க்கை துணையிடமும் குழந்தைகளிடமும் அனுசரித்துச் செல்ல வேண்டும். குடும்பத்துக்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும்.பெண்களுக்கு எல்லாவற்றிலும் தாமதம் இருக்கும்.கலைத் துறையினர் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும். நண்பர்களின் உதவியால் நிலுவைப் பணம் கைக்கு வரும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தால் அழுத்தம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். வீண் செலவைக் குறைப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன் திசைகள்: வடக்கு, வடமேற்கு நிறங்கள்: சிவப்பு எண்கள்: 1, 5, 9 பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்மனை வழிபட எதிர்ப்புகள் அகலும். காரிய தடை நீங்கும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் திட்டமிட்டு செய்யும் பயணங்களால் வெற்றி உண்டு. தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வாக்கு வன்மையால் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். பிரச்சினைகளைப் பேசித் தீர்த்து விடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  வேலை கிடைக்கலாம்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாட்களாக வாங்க  நினைத்த ஆடை, ஆபரணங்களை வாங்கலாம்.குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளுக்குச் சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு, புத்திக் கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். அரசியல்வாதிகள் எதையும் புத்திசாதுரியத்தைப் பயன்படுத்திச் சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவு இருக்கும்.மாணவர்களுக்கு, ஆசிரியர்களின் ஆதரவுடன் படித்துத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி திசைகள்:கிழக்கு, தென்கிழக்கு நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் எண்கள்: 3, 6 பரிகாரம்: சித்தர்களுடைய ஜீவ சமாதிக்குச் சென்று வணங்கி வருவது மன அமைதியைத் தருவதுடன் எல்லா நன்மைகளையும் தரும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் தொட்ட காரியங்கள் துலங்கும். பணவரவு அதிகரிக்கும். செயல்திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும்.வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும்.தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.வியாபாரம், தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்குக் கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தினரால் கூடுதல் வருமானம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் சுமுகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும். .பெண்களுக்கு, மற்றவர்கள் உதவியுடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். கலைத் துறையினர் வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி திசைகள்:தெற்கு, வடமேற்கு நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள் எண்கள்: 2, 6 பரிகாரம்: சனி பகவானை தீபம் ஏற்றி வணங்கி வழிபட உடல் ஆரோக்கியம் பெறும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் புத்தி சாதுரியத்தைப் பயன்படுத்திக் காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள்.செயல்திறன் அதிகரிக்கும். பயணங்களின்போது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில்,வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பங்குதாரர்களுடன், ஆலோசனை செய்வது கூடுதல் லாபம் அனுகூலம் கிடைக்க வழி செய்யும். உத்தியோகஸ்தர்கள், எந்தவொரு வேலையையும் மேலதிகாரிகள், சக ஊழியர்களின் குறிப்புகளைக் கேட்டுச் செய்யவும்.குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்துச் செல்ல வேண்டும்.மருத்துவம் தொடர்பான செலவு ஏற்படலாம்.பெண்களுக்கு மனத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். கணவர் வழியில் நல்ல சேதி வந்து சேரும். கலைத் துறையினருக்கு பணவரவு திருப்தி தரும். அரசியல்வாதிகள் புதிய வேலைகளை தொடங்க முடியும். மாணவர்களுக்கு எதையும் அவசரமாகச் செய்யாமல் யோசித்து செயல்படுவது நல்லது. கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி திசைகள்: மேற்கு, வடமேற்கு நிறங்கள்: வெள்ளை.மஞ்சள் எண்கள்: 3, 6 பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் சற்று கால தாமதம் ஆகலாம். பணவரவு கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்தமான இடத்துக்கு வேலை மாற்றம் கிடைக்கலாம்.குடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்ல வேண்டும். நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம்.எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் ஆராய்ந்து ஈடுபடுவது நல்லது. கலைத் துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைப்பது தாமதப்படும்.அரசியல்வாதிகளுக்கு, வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கவனத் தடுமாற்றம் இல்லாமல் பாடங்களைப் படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன் திசைகள்: வடக்கு, தென்மேற்கு நிறங்கள்: சிவப்பு,மஞ்சள் எண்கள்: 3, 9 பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சினை குறையும்.


 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close