[X] Close

இந்தவாரம் உங்களுக்கு இப்படித்தான்! பிப்ரவரி 28 முதல் மார்ச் 6 வரை (மேஷம் முதல் கன்னி வரை)


indha-vaaram-ungalukku-ippadithan

  • kamadenu
  • Posted: 28 Feb, 2019 09:10 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்த ஒரு விஷயத்திலும் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கலாம். பணவரவு திருப்தி தரும். தொழில், வியாபாரத்தில் இழுபறி நிலை காணப்படும்.உத்தியோகத்தில் திருப்தியான நிலை நிலவும். குடும்பத்தினரிடம் தன்மையாகப் பேசி பழக வேண்டும்.தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் பேசிச் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். குழந்தைகளுடன் நிதானமாகப் பேசி  எதையும் புரிய வைக்க வேண்டும்.பெண்களுக்கு அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. கலைத் துறையினருக்கு பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியும். மாணவர்களுக்கு, கல்வியை பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளிவான மனத்துடன் பாடங்களை படித்து வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி திசைகள்: கிழக்கு, தெற்கு நிறங்கள்: வெள்ளை, சிவப்பு எண்கள்: 1, 3  பரிகாரம்:  அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்கி வழிபட மனக்கவலை தீரும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். அறிவுத் திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும்.அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம்.அதிகமான உழைப்பும் அலைச்சலும் இருக்கும்.தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.வியாபார வளர்ச்சிக்குப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திப்பார்கள். தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அன்பு அதிகரிக்கும்.  பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கலைத் துறையினர் வெளியூர்ப் பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள் புதிய பதவிகளைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது மனத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும். தேர்வில் அதிக மதிப்பெண்ணுக்கான குறிக்கோளுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி திசைகள்:தென்மேற்கு, தெற்கு நிறங்கள்: வெள்ளை எண்கள்: 3, 6 பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று நவகிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ய பணவரவு கூடும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் புகழ், கவுரவம் அதிகரிக்கும். நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் அனைரவுக்கும் கை கொடுக்கும். சுயமாக எடுக்கும் முடிவுகள் பலன் தரும்.தைரியம் அதிகரிக்கும்.  பணவரவு அதிகரிக்கும்.தொழில், வியாபாரத்தில் கூடுதல் முயற்சிக்குப் பிறகு எதிர்பார்த்தபடி அனைத்தும் நடந்து முடியும்.பயணங்கள் செல்ல நேரிடலாம். வியாபாரத்தில் புதுமையை செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையைச்  செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும்.கணவன் மனைவிக்குள் மனவருத்தம் குறையும்.பிள்ளைகள் மீது கவனம் தேவை. வாகனங்களால் செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. பெண்களுக்கு உங்களது காரியங்களுக்கு ஆதரவு கிடைக்கும். கலைத் துறையினருக்கு,  எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு செயல்திறன் கூடும். மாணவர்களுக்கு, பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன் திசைகள்:மேற்கு, தென்மேற்கு நிறங்கள்: பச்சை, மஞ்சள் எண்கள்: 2, 3, 5 பரிகாரம்: புதன்கிழமை விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வெங்கடாஜலபதியை வணங்க பிரச்சினைகள் தீரும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் மனத்தெளிவு உண்டாகும்.ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். கடிதப் போக்குவரத்து அனுகூலமான பலனைத் தரும்.பயணம் லாபகரமாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாகப் பயணங்கள் சென்று வர வேண்டி இருக்கும். வியாபாரச் செலவுகள் அதிகரிக்கும்.உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.வேலை தொடர்பான கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அமைதியைத் தரும்.கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பேசி எடுக்கும் முடிவுகள் சாதகமாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். பெண்களுக்கு, நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகள் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நன்மைதரும். விளையாட்டோடு கல்வியிலும் கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன் திசைகள்:வடக்கு, வடகிழக்கு நிறங்கள்: வெள்ளை எண்கள்: 2, 6பரிகாரம்: சரஸ்வதி தேவியை பூஜித்து வர காரியங்களில் வெற்றி உண்டாகும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றியால் சந்தோஷம் உண்டாகும். தொழில் முன்னேற்றம் காணப்படும். கடிதப் போக்குவரத்தால் தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசித்  தக்கவைத்துக் கொள்வீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள்.திட்டமிட்டுச் செயலாற்றுவதால் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மனைவி, குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு  நீங்கும்.உறவினர்கள், நண்பர்கள் உதவ முன்வந்தாலும் உதவி தாமதமாகவே கிடைக்கும். சகோதரர்களால் மனவருத்தம் உண்டாகும்படியான சம்பவம் நேரலாம். தாய்வழி உறவினர்களால் உதவி உண்டு. பெண்களுக்கு பணவரவு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகளுக்கு மனக்குழப்பம் அகலும். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் திசைகள்: கிழக்கு, வடக்கு நிறங்கள்: வெள்ளை,மஞ்சள், நீலம் எண்கள்: 1, 3, 9 பரிகாரம்:ஞாயிற்றுக்கிழமை  சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க மனதைரியம் பிறக்கும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் வாகனச் செலவு உண்டாகும். மனத்தில்வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைப்பது கடினமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சாதகமாக நடந்து முடியத் திறமையாகச் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் சொல்படி நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வார்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத் துணை உங்களுக்கு பல விதத்திலும் ஆதரவாக இருப்பார்.உறவினர் வருகை இருக்கும். அனுபவப் பூர்வமான அறிவுத் திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு மனமகிழ்ச்சி உண்டாகும்.கலைத் துறையினருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு செலவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றி பெற உதவும். மனோதைரியம் கூடும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வியாழன் திசைகள்: தெற்கு, தென்மேற்கு நிறங்கள்: பச்சை,சிவப்பு எண்கள்: 3, 5, 9 பரிகாரம்: நரசிம்மரை வணங்க மனதைரியம் உண்டாகும்.  எதிர்ப்புகள் அகலும்.எதிலும் வெற்றி உண்டாகும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close