[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 26 Feb, 2019 09:16 am
  • அ+ அ-

மேஷம்: தேவையற்ற அலைச்சல், செலவுகள் இருக்கும். நீங்கள் நல்லது சொல்லப்போக, சிலர் தவறாகப் புரிந்துகொள்வார்கள். உங்கள் உடல்நலத்தில் கவனம் தேவை. 

ரிஷபம்: தடைகளைப் பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். 

மிதுனம்: புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். காரியத்தில் நிதானம் தேவை. 

கடகம்: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பணவரவு, பொருள் வரவு உண்டு. 

சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக் கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணப் பற்றாக்குறை இருந்தாலும், சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். எதிலும் கவனம் தேவை. 

கன்னி: போட்டி, விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மன அழுத்தம், மன இறுக்கம் நீங்கும். முக்கியஸ்தர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு. வழக்கில் சாதகமான திருப்பம் வரும். 

துலாம்: நீண்ட காலமாக தடைபட்டிருந்த வேலைகளை, உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். 

விருச்சிகம்: அவமானங்கள், இடையூறுகளைக் கடந்து செல்வீர்கள். கோயில் முக்கிய நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி பாராட்டு பெறுவீர்கள். கடன் சுமையை நினைத்து வருந்துவீர்கள். 

தனுசு: திடீர் பயணம், அலைச்சலால் தூக்கம் கெடும். அரசு, வங்கி விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வந்து நீங்கும். ஆன்மிக நாட்டம் கூடும். 

மகரம்: தக்க சமயத்தில் பிரபலங்களின் ஆதரவு, உதவிகள் கிடைக் கும். பழைய வழக்கில் சாதகமான திருப்பம் உண்டாகும். பங்குச் சந்தை வகையில் ஆதாயம் உண்டு. முக்கிய பதவிகள் தேடிவரும். 

கும்பம்: உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர் களை சந்தித்து மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உங்கள் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். 

மீனம்: நினைத்த காரியம் நிறைவேறும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் அரிய சில வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close