[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • வி.ராம்ஜி
  • Posted: 25 Feb, 2019 09:36 am
  • அ+ அ-

மேஷம்: அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவிவழி உறவினர்களும் உங்களுக்கு ஆறுதலாக பேசுவார்கள். அரசு, வங்கி வகையில் ஆதாயம், அனுகூலம் உண்டு.

 ரிஷபம்: பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். சிக்கல்களை தீர்க்க நல்லவர்களின் ஆலோசனைகளும், உதவியும் கிடைக்கும். பல வகையிலும் பணவரவு, பொருள் வரவு உண்டாகும். 

மிதுனம்: உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும். 

கடகம்: மனதில் நம்பிக்கை, தைரியம் பிறக்கும். திட்டவட்டமாக, தெளிவாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். 

சிம்மம்: விலை உயர்ந்த பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கண்டும் காணாமல் சென்றவர்கள் இப்போது வலிய வந்து பேசுவார்கள். காரியத்தில் நிதானம் தேவை. 

கன்னி: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். நட்பு வட்டம் விரிவடையும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பேச்சில் கவனம் அவசியம். 

துலாம்: யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது. சொல்ல வருவதை நாசூக்காக, மென்மையாக எடுத்துச் சொல்லுங்கள். உறவினர், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். 

விருச்சிகம்: பணப் பற்றாக்குறை நீடித்தாலும், கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருப்ப வர்களால் அனுகூலம் உண்டு. ஆன்மிக நாட்டம் கூடும். 

தனுசு: உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீட்டை சீரமைப் பீர்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். 

மகரம்: பழைய நண்பர்கள் வீடு தேடி வந்து பேசுவார்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்சினை சுமுகமாகத் தீரும். 

கும்பம்: வேலைச்சுமை குறையும். வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். ஆரோக்கியம், அழகு கூடும். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் விலகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். 

மீனம்: வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் உண்டாகும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close