[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 24 Feb, 2019 09:10 am
  • அ+ அ-

மேஷம்: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். நண்பர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். திடீர் பயணம் உண்டு.

ரிஷபம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு சில காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். மனைவிவழி உறவினர்களின் உதவி கிடைக்கும்.

மிதுனம்: பல நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் இன்று முடிவுக்கு வரும். பிள்ளைகளின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கடகம்: மன இறுக்கம் நீங்கி எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் விலகும். வாகனப் பழுதை சரிசெய்வீர்கள்.

சிம்மம்: ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும்.

கன்னி: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

துலாம்: எந்தக் காரியத்தைத் தொட்டாலும் பலமுறை முயன்று முடிக்க வேண்டிய நிலை உருவாகும். சிலரின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள்.

விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். யாரையும் மனம்நோகும்படி உதாசீனமாகப் பேச வேண்டாம். 

தனுசு: பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிரியமானவர்களுக்காகச் சில காரியங்களைச் செய்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். 

மகரம்: மன உறுதியுடன் செயல்பட்டு சவாலான சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினரின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தந்தையின் உடல்நிலை சீராகும்.

கும்பம்: புது முயற்சிகள் வெற்றி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் நீங்கும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

மீனம்: உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவார்கள்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close