[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 23 Feb, 2019 08:41 am
  • அ+ அ-

மேஷம்: அதிரடி திட்டங்களைத் தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு எதிர்பாராமல் நிகழும்.

ரிஷபம்: முகப்பொலிவு கூடும். சாதுர்யமாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

மிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவர்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை துணிந்து எடுப்பீர்கள்.

கடகம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். தைரியமான முடிவுகள் எடுத்து வெற்றி காண்பீர்கள். நீண்டநாட்களாக விலகியிருந்த உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும்.

சிம்மம்: மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும். குடும்பத்தினரின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்.

கன்னி: சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். நீங்கள் ஒன்று பேசப்போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்வார்கள். எனவே நிதானம் அவசியம். திடீர் பயணம் உண்டு.

துலாம்: விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். அநாவசியச் செலவுகளைத் தவிர்த்து சேமிக்க முற்படுவீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. 

விருச்சிகம்: உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து எதிர்காலத்துக்கென முதலீடு செய்வீர்கள். பால்ய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.  

தனுசு: உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சகோதரர் வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவு கூடும்.

மகரம்: சோர்வாக இருந்த நிலை மாறி சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு.

கும்பம்: அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அடுத்தவர்களை குறைகூறுவதை நிறுத்துங்கள். சாலையைக் கடக்கும்போது கவனமுடன் செல்லுங்கள்.

மீனம்: சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கி ஒற்றுமை ஏற்படும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close