[X] Close

இனி உங்களுக்கு வெற்றிதான்! மாசி சுக்ல சங்கடஹர சதுர்த்தி வழிபாடு!


vinayagar

விநாயகப் பெருமான்

  • வி.ராம்ஜி
  • Posted: 22 Feb, 2019 09:11 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

சங்கடங்கள் யாருக்குத்தான் இல்லை? சந்தோஷம் எவருக்குத்தான் தேவையில்லை. சங்கடங்கள் அனைத்தையும் களையச் செய்து, நமக்கு சந்தோஷம் அருளக் காத்திருக்கிறார் விநாயகப் பெருமான். பிள்ளையாருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி நாளில், அவரை வணங்கித் தொழுவோம். இன்று (22.2.19) சங்கடஹர சதுர்த்தி. இன்று மாசி சுக்ல சங்கடஹர சதுர்த்தி. 

சங்கடஹர சதுர்த்தியில், கணபதி வழிபாட்டைச் செய்யுங்கள். அருகம்புல் மாலை சார்த்தி ஆனைமுகனை வழிபடுங்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருள்வார் விநாயகப் பெருமான்!

மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி நாள் வரும். இது விநாயகர் வழிபாட்டுக்குரிய அற்புதமான நாள். மாதந்தோறும் வருகிற சிவராத்திரி, சிவ வழிபாட்டுக்கு உரியது என்பது போல், சஷ்டியானது முருக வழிபாட்டுக்கு உகந்தது என்று கொண்டாடுவது போல், ஏகாதசி நாளில் மகாவிஷ்ணுவை வழிபடுவது போல், சங்கட ஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவார்கள் பக்தர்கள்.

இந்தநாளில், விநாயகர் அகவல் படித்தும் பூஜைகள் மேற்கொள்ளலாம்.

மாலையில், அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, ஆனைமுகனைத் தரிசிப்பது நன்மை பயக்கும். நலம் அனைத்தும் வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இன்றைய சங்கடஹர சதுர்த்தி நன்னாளில் (22.2.19), சுக்ர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமையில் வந்திருக்கும் இந்த அற்புதமான நாளில், விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை, அருகம்புல் மாலை சார்த்துங்கள். கொழுக்கட்டையோ, சர்க்கரைப் பொங்கலோ நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ளுங்கள்.

இனியெல்லாம் ஜெயமே... என்று உங்களை இனிதே வாழச் செய்வார் பிள்ளையாரப்பன்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close