[X] Close

இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! பிப் 21 முதல் 28 வரை (துலாம் முதல் மீனம் வரை)


indha-vaaram-ungalukku-ippadhithan

  • kamadenu
  • Posted: 21 Feb, 2019 11:29 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களால் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். அலைச்சல் இருக்கும். பயணங்களால் லாபம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் இழுபறி நிலை மாறும். வீண் பேச்சுக்களைப் குறைத்துக் கொள்வது நல்லது. கலைத் துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.

பழைய பாக்கிகள் வசூலாகும். முக்கியஸ்தர்களின் உதவிகள் கிடைக்கும். கொடுத்த வேலையைத் திறமையுடன் செய்து முடித்துப் பாராட்டுகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பெண்களுக்கு, அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரும். பயணங்கள் உண்டாகும். எதிர்ப்புகளைச் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபட்டுப் படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 3, 6

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக்கிழமை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் வாழ்க்கையில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகலாம். மனத்துக்கு பிடித்தமான காரியங்களைச் செய்து மனநிறைவடைவீர்கள். பிரபலங்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் எதிர்பாராத வளர்ச்சி காண்பார்கள். மனதைரியம் கூடும். குடும்பத்தில் சிக்கல்கள் நீங்கும். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டாகும்.

கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். ஆன்மிகப் பயணங்கள் செல்ல நேரிடும். கலைத் துறையினருக்கு பேச்சில் இனிமையால் எடுத்த காரியம் கைகூடும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். பெண்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனம் மகிழும் சம்பவங்கள் நிகழும். மாணவர்களுக்கு உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை

எண்கள்: 6, 9

பரிகாரம்: முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வணங்க பிரச்சினைகள் தீரும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி நன்மதிப்பு பெறுவீர்கள். சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் சக்திவாய்ந்த பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். கணவன் மனைவிக்குள் சுமுக உறவு இருக்கும். சுபநிகழ்ச்சிகளுக்கான ஆரம்ப விஷயங்கள் இனிதே நடைபெறும்.

கலைத் துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன்  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். அரசியல்வாதிகளுக்கு, அவசரப்படாமல்  நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். பணவரவு அதிகரிக்கும். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். பெண்களுக்கு, எப்படிப்பட்ட சிக்கலான பிரச்சினைகளையும் தீர்க்கும் வல்லமை உண்டாகும். எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 3, 6

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை நெய்தீபம் ஏற்றி வணங்க பணவரத்து கூடும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் நீண்ட நாட்களாக  முடியாமல் இருந்த ஒரு வேலை நடக்கும். தைரியம் அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலையிலும் கவனமாக இருப்பது நல்லது. கடன் விவகாரங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு, பணியில் கவனம் தேவை. குடும்பத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களால் காரியங்களில் தாமதம் ஏற்படலாம். . உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத் துறையினருக்கு  நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள்.

புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களால் காரியங்களில் தாமதம் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். எனவே எல்லோரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும். பெண்களுக்கு நினைத்த காரியங்களில் சாதகமான பலன் இருக்கும். வீண் மனக்கவலை வேண்டாம். மாணவர்களுக்கு, கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள்

எண்கள்: 3, 5, 6

பரிகாரம்: சனிக்கிழமையன்று ஆஞ்சநேயரை வெண்ணை சாற்றி வணங்கி வர துணிச்சல் அதிகரிக்கும். 

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு இருக்கும். எந்த விஷயத்திலும் இழுபறி நிலை காணப்படும். புதிய நட்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். வியாபாரத்துக்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் அன்பு கூடும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

பெண்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். கவனத் தடுமாற்றம் உண்டாகலாம் கலைத் துறையினருக்கு கிரகச் சூழ்நிலை சாதகமாக இல்லாததால் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அறிவுத்திறன் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் வளர்ச்சிக்காகச் சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். மாணவர்களுக்கு, சக மாணவர்கள், ஆசிரியர்களை அனுசரித்துச் செல்வதால் தேவையான  உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: நீலம், மஞ்சள்

எண்கள்: 2, 3, 6

பரிகாரம்: சனிக்கிழமை பெருமாளை தீபம் ஏற்றி வணங்கி  சனிஸ்வர பகவானையும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும். 

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்ப்புகள் நீங்கும். புதிய தொடர்புகள் உண்டாகும். பெண்களால் நன்மை உண்டாகும். வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரம் நிதானமாக நடக்கும். வீட்டில் விலையுயர்ந்த பொருட்களைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். கணவன், மனைவிக்குள் இடைவெளி குறையும். கலைத் துறையினருக்கு எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.

எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்யுங்கள். அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்துக்குப் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். பெண்களுக்கு, வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். பணவரவு திருப்தி தரும். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பதன் மூலம் கல்வியில் வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: விநாயகப் பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட தடை நீங்கி காரியம் நடக்கும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close