[X] Close

இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! பிப் 21 முதல் 28 வரை (மேஷம் முதல் கன்னி வரை)


indha-vaaram-ungalukku-ippadithan

  • kamadenu
  • Posted: 21 Feb, 2019 11:23 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். காரியங்களில் தொய்வு ஏற்பட்டாலும் முடிவில் நன்மை நடக்கும். மனசஞ்சலம் நீங்கும். தொழில், வியாபாரம் மேம்படும். அதே நேரத்தில் புதிய வாடிக்கையாளர்களைப் பிடிக்க கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். அரசாங்க ரீதியிலான அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணிகளைத் தாமதம் இல்லாமல் முடிக்கப் பாடுபடுவார்கள்.

வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. நினைத்ததைச் சாதிக்கும் மனவலிமை உண்டாகும். கலைத் துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில்  செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு பேச்சில் கடுமையைக் காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தவர்களால் மனமகிழும் படியான சூழ்நிலை உருவாகும். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு, பழுப்பு

எண்கள்: 1, 9

பரிகாரம்: சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து நவகிரகத்தில் செவ்வாயை வழிபட துன்பங்கள் நீங்கும். இன்பங்கள் உண்டாகும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் காரிய தடைகள் நீங்கும். திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும். கடன் தொல்லை குறையும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்து விவகாரகங்களிலிருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள், நண்பர்களால் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் நல்லபடியாக நடைபெறும். கலைத் துறையினருக்கு எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக தப்பித்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். சாதுரியமான பேச்சினால் காரிய வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு முட்டுக்கட்டைகள் நீங்கும். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை விழும். பெண்களுக்கு, திட்டமிட்டபடி காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். தடைநீங்கி பணிகள் வேகம் பிடிக்கும். செல்வாக்கு கூடும். மாணவர்களுக்கு, பல தடைகளையும் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம்

எண்கள்: 2, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமை ராஜ ராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்கவும். கடன் பிரச்சனை தீரும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு நன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் கடனை எதிர்பார்த்தவர்களுக்கு நினைத்த இடத்தில் கடன் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்திடத்திலிருந்து பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்குள் மனவருத்தம் மாறி சகஜ நிலை ஏற்படும். குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். 

சகோதர சகோதரிகளிடம் நிலவி வந்த வருத்தங்கள் நீங்கும். கலைத் துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் வரலாம். கவனமாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். மேலிடத்  தகவல்கள் உகந்ததாகவே அமையும். பெண்களுக்கு வீண் அலைச்சலும், காரிய தாமதமும் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை தேவை. மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன்

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, சிவப்பு

எண்கள்: 1, 5

பரிகாரம்: மதுரை மீனாட்சியையும் சொக்கநாதரையும் வணங்கி வருவதுடன் நவகிரகத்தில் புதனுக்கு பச்சை பயிறு சுண்டல் நைவேத்தியம் செய்து வினியோகிக்கவும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் சுப பலன்கள் உண்டாகும். எடுத்த காரியங்களில் தாமதம் நீங்கி வேகம் எடுக்கும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். தொழில், வியாபார விவகாரங்கள் வேகம் பெறும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்றப் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும். உறவினர்களின் உதவி கிடைக்கும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை.

கலைத் துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு உங்களைப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். பெண்களுக்கு, அவசரப்பட்டு எந்த வாக்குறுதியையும் கொடுக்க வேண்டாம். மாணவர்களுக்கு, சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுசரித்துச் செல்வதால் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம்

எண்கள்: 2, 4

பரிகாரம்: சந்திரனை வணங்கி தயிர் சாதத்தை விநியோகித்தால் குழப்பங்கள் நீங்கி மனதெளிவு உண்டாகும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் உடல் ஆரோக்கியம் பெறும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். பங்குதாரர்களிடம் நிதானத்தைக் கடைபிடிப்பது சிறந்தது. உத்தியோகத்தில் இருப்பவர்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். கலைத் துறையினருக்கு விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரவு திருப்திதரும்.

தடைகள் நீங்கும். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். அரசியல்வாதிகளுக்கு தெளிவு ஏற்படும். பெண்களால் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். பெண்களுக்கு, எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மனோதிடம் கூடும். உற்சாகமாக காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு, பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்விக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

எண்கள்: 1, 6, 9

பரிகாரம்: நவகிரகத்தில் சூரியனை வணங்கி கோதுமையால் செய்யப்பட்ட உணவு பொருளை நைவேதியம் செய்து விநியோகிக்க வேண்டும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்துக்குத் தேவையான பண உதவி கிடைக்கும். தொழில் விருத்தியடையும். தொழில் மேன்மை அடைவதற்கான வழிகளைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் மேன்மை அடைவார்கள். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் திருப்திகரமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பேசாமல் இருப்பது நன்மை தரும்.

குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். கலைத் துறையினருக்கு மனத்தில் சந்தோஷம் உண்டாகும். மரியாதை, அந்தஸ்து உயரும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். தைரியம் உண்டாகும். பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை அலைந்தே செய்து முடிக்க வேண்டி வரும். மாணவர்களுக்கு, கல்விக்கான செலவு கூடும். பாடங்கள் படிப்பதில் வேகம்  இருக்கும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சினை குறையும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பச்சை, வெள்ளை

எண்கள்: 5, 6

பரிகாரம்: புதன்கிழமை விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close