[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 21 Feb, 2019 09:09 am
  • அ+ அ-

மேஷம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவர்ந்து விடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

ரிஷபம்: தைரியமாக சில முடிவுகள் எடுத்து வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சகோதரர் வகையில் மகிழ்ச்சி தங்கும்.

மிதுனம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள்.

கடகம்: பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள்.

சிம்மம்: திட்டமிடாத செலவுகள், பயணங்கள் ஏற்படும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும்.

கன்னி: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.   

துலாம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

விருச்சிகம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராக இருக்கும்.

தனுசு: எதிரிகளை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு மறையும். விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

மகரம்: உங்களுடைய பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. சொந்தபந்தங்களால் அன்புத் தொல்லை உண்டு. சில காரியங்களை பலமுறை முயன்று முடிப்பீர்கள்.

கும்பம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும். எந்தக் காரியமானாலும் நிதானமுடன் செயல்படுவது நல்லது.

மீனம்: கடந்தகால இனிய சம்பவங்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close