[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungkalukku-eppadi

  • kamadenu
  • Posted: 20 Feb, 2019 09:14 am
  • அ+ அ-

மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரியும். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்: உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

கடகம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

சிம்மம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

கன்னி: யாருக்காகவும் ஜாமீன், உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.

துலாம்: கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். விலகி நின்ற சொந்தபந்தங்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பணவரவு உண்டு.

விருச்சிகம்: எந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்கும் மனப்பக்குவம், தைரியம் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி உண்டாகும்.

தனுசு: உணர்ச்சிபூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

மகரம்: உங்களுடைய பலம், பலவீனத்தை உணர்ந்து அதற்கேற்ப செயல்படுவது நல்லது. பலமுறை முயன்று காரியங்களைச் சாதிப்பீர்கள். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு..

கும்பம்: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்படும். வாகனத்தைச் சரி செய்வீர்கள். நீண்டகாலமாக விலகியிருந்த உறவினர்கள் தேடிவருவார்கள். திடீர் பயணம் உண்டு.

மீனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நவீன ஆடை, ஆபரணங்கள் சேரும்.

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close