[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 19 Feb, 2019 09:15 am
  • அ+ அ-

மேஷம்: உங்களின் உழைப்புக்கேற்ப வருமானமும் உயரும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை வழிநடத்துவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

ரிஷபம்: பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவு வரக்கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

மிதுனம்: சகோதரர்களால் பயனடைவீர்கள். பூர்வீகச் சொத்து உங்கள் கைக்கு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

கடகம்: பணப்புழக்கம் கணிசமாக உயரும். உடல்நிலை சீராகும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். திடீர் பயணம் உண்டு.

சிம்மம்: சின்னச் சின்ன பிரச்சினைகள் குடும்பத்தில் தலைதூக்கும். தர்மசங்கடமான சூழ்நிலையில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள்.

கன்னி: தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். அத்தியாவசிய செலவுகளால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டியது வரும்.

துலாம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசியும், ஆதரவும் கிட்டும். நீண்ட நாட்களாக விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். பொதுக் காரியங்களில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.

விருச்சிகம்: எதிர்பார்த்திருந்த பொறுப்பு, பதவி தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். 

தனுசு: வழக்கில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.

மகரம்: சிலரது விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சுக்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

கும்பம்: நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சகோதரர் வகையில் நிலவிய குழப்பம் நீங்கி ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மீனம்: பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். விருந்தினர் வருகை உண்டு. பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close