[X] Close

இந்த நாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 18 Feb, 2019 08:10 am
  • அ+ அ-

மேஷம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு புது வேலை கிடைக்கும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும்.

ரிஷபம்:  குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். இழுபறியாக உள்ள சொத்துப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் பனிப்போர் நீங்கி அன்யோன் யம் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.

கடகம்: வேலைச் சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

சிம்மம்: திட்டமிட்ட காரியங்களைக்கூட அலைந்து, திரிந்து முடிக்க நேரிடும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகன வகையில் வீண் செலவுகள் ஏற்படும்.

கன்னி: எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். புதிய தொழில் தொடங்குவீர்கள்.

துலாம்: எதையும் சமாளிக்கும் நம்பிக்கை, தைரியம் பிறக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு குடும்பத்தோடு சென்று வருவீர்கள்.

விருச்சிகம்:  நீங்கள் விரும்பிய புதிய பாதையில் பயணிப்பீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.

தனுசு: குடும்பத்தில் நீங்களே எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுப் பார்க்க நேரிடும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்காதீர்கள். பணவரவு, பொருள் வரவு உண்டு.

மகரம்: உங்கள் திறமைகள் வெளிப்படும். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து, பாராட்டு பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கும்பம்: உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அரசு, வங்கி வகையில் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும்.

மீனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் கிடைக்கும்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close