[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 17 Feb, 2019 09:14 am
  • அ+ அ-

மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்துமோதல்கள் வரக்கூடும். 

ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பும் உதவியும் கிடைக்கும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்: தேவையற்ற விஷயங்களை நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். திடீர் பயணம் உண்டு.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். உறவினரால் சங்கடம் வரும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

கன்னி: உங்கள் கை ஓங்கும். இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வீட்டை புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

துலாம்: பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையை அறிந்து பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். இழுபறியாக இருந்த தொகை வரும்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 

தனுசு: இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர்கள், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம்.

மகரம்: சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வாகனத்தைச் சரி செய்வீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களைக் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

மீனம்: அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். பழைய கடன் பிரச்சினைகளில் ஒன்று தீரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். கலைப்பொருட்கள் சேரும்.

 

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close