[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 16 Feb, 2019 08:49 am
  • அ+ அ-

மேஷம்: எதிலும் முன்னேற்றம், வெற்றி உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தபந்தங்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். 

ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: தாயாருடன் எதிர்பாராத வகையில் மனத்தாங்கல் வரும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. மின்சார சாதனங்கள் செலவு வைக்கும். திடீர் பயணம் உண்டு.

கடகம்: சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படாதீர்கள். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. விருந்தினர் வருகை உண்டு.

சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதி கிடைக்கும்.

கன்னி: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

துலாம்: தந்தைவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். புண்ணிய காரியங்கள், சுபகாரியங்களை தலைமை தாங்கி நடத்துவீர்கள். பண வரவு உண்டு.

விருச்சிகம்: வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் கருத்துமோதல்களும், பிரச்சினைகளும் வரக்கூடும்.

தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழும். கல்யாணப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மகரம்: மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீண்டநாட்களாக விலகியிருந்த பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். அவர்கள் மூலமாக உதவிகள் கிட்டும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும்.

மீனம்: ஆன்மிக ஆற்றல் கிட்டும். கடந்த காலத்தில் நிகழ்ந்த இனிய சம்பவங்களை நினைத்து மகிழ்வீர்கள். மகிழ்ச்சியான செய்தி தேடிவரும். வெளிவட்டாரத்தில் எல்லோரும் மதிப்பார்கள். 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close