[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 15 Feb, 2019 08:53 am
  • அ+ அ-

மேஷம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அலங்காரப் பொருட்களால் வீட்டை அழகுபடுத்துவீர்கள். பண வரவு உண்டு.

ரிஷபம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். அவர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். விருந்தினர் வருகை உண்டு.

மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களைப் பற்றி வெளி நபர்களிடம் குறைகூறி பேச வேண்டாம். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய சில கருத்துகள்கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது.

கடகம்: விடாப்பிடியாகச் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் கோபப்படுவார்கள். திட்டமிடாத செலவுகளையும் சமாளிப்பீர்கள். யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம்.

சிம்மம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்டநாள் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும்.

கன்னி: எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். பணவரவு உண்டு.

துலாம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளை நல்வழிபடுத்துவீர்கள். அவர்களின் எதிர்காலத்துக்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சிவசப்படாதீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

தனுசு: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பால்ய நண்பர்களைச் சந்திப்பதன் மூலம் மனநிறைவு கிட்டும்.

மகரம்: எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வரும் பணத்தால் சமாளிப்பீர்கள். சாதுர்யமாகப் பேசி சில காரியங்களை சுலபமாக முடித்து விடுவீர்கள். 

கும்பம்: பிள்ளைகளின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

மீனம்: சகோதரர் வகையில் நன்மை பிறக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் நிலவிய கூச்சல், குழப்பம் யாவும் நீங்கும். 

 

 

 

 

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close