[X] Close

இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! பிப் 14 முதல் 20 வரை (மேஷம் முதல் கன்னி வரை)


indha-vaaram-ungalukku-ippadithan

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 09:39 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே 

இந்த வாரம் எதைப் பற்றியும் அதிகம் யோசிக்க வேண்டாம். திடீர் பணத்தேவை உண்டாகலாம். வெளியூர்க் கடிதங்கள் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் இடையூறுகள் குறையும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும். செய்தொழில் சிறக்கும். 

கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். 

பெண்களுக்கு, தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனத்தெளிவு உண்டாகும். பணவரவு இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கலைத் துறையினர் அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். 

மாணவர்களின் திறமை வெளிப்படும். சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன் திசைகள்: கிழக்கு, வடமேற்கு நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் எண்கள்: 2, 3, 9 பரிகாரம்: முருகனை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும். 

ரிஷப ராசி வாசகர்களே 

இந்த வாரம் எதிர்பாராத செலவு உண்டாகும். வெற்றி கிடைப்பதில் தாமதம் இருக்கும். பணவரவு தொடர்ந்து இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்.

 தொழில், வியாபாரத்தில் இடையூறுகள் குறையும். உத்தியோகத்தில் கவலை ஏற்பட்டு நீங்கும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். தம்பதிகளுக்குள் நல்லுறவு ஏற்படும். கடன் விவகாரங்களில் யோசித்துச் செயல்பட வேண்டும். 

பெண்களுக்கு, வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. 

கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். 

மாணவர்களுக்கு, ஆசிரியர் ஆதரவு கிடைத்தாலும் சக மாணவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. 

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி திசைகள்: மேற்கு, தென்கிழக்கு நிறங்கள்: வெள்ளை எண்கள்: 2, 6 பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தர காண்டம் படித்து வர கஷ்டங்கள் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். 

மிதுன ராசி வாசகர்களே 

இந்த வாரம் தடைபட்ட காரியங்கள் எந்தவித இடையூறுமின்றி நடந்து முடியும். வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும். அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள் பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பவர்கள். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். 

தொழில், வியாபாரத்தில் வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவைத் தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும். 

குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். 

பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். 

கலைத் துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு வழக்கத்தை விடக் கூடுதல் நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை. 

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன் திசைகள்: மேற்கு, வடகிழக்கு நிறங்கள்: பச்சை, மஞ்சள் எண்கள்: 3, 5 

பரிகாரம்: பெருமாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும். 

 

கடக ராசி வாசகர்களே 

இந்த வாரம் எடுத்த காரியத்தைச் செய்து முடித்து விடுவீர்கள். சுபச் செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர்களின் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். 

தொழில் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். புத்திசாதுரியத்தால் மேலதிகாரிகள் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் குழப்பம் நீங்கும். மனவருத்தம் நீங்கும். 

பெண்களுக்கு, காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

 அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் தொல்லைகள் குறையும். உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். 

கலைத் துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதனைகளும் இருக்கும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியம். 

மாணவர்களுக்கு, புத்திசாதுரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன் திசைகள்: வடக்கு, வடகிழக்கு நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை எண்கள்: 2, 5 

பரிகாரம்: அபிராமி அந்தாதி சொல்லி அம்மனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும். பஞ்சமுக விளக்கு ஏற்றுவது சிறந்தது. 

 

சிம்ம ராசி வாசகர்களே 

இந்த வாரம் எதிர்பாராத திருப்பம் உண்டாகலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். 

தொழில், வியாபாரத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தினரால் ஏற்பட்ட சிக்கல் நீங்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை காணப்படும். உறவினர்களிடம் வேற்றுமைகள் அகலும். 

பெண்களுக்கு, நண்பர்கள், உறவினர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். புதிய காரியங்களை யோசித்துச் செய்ய வேண்டும். 

அரசியல்வாதிகள் எந்த வேலையையும் எளிதாகச் செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். கலைத் துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 

மாணவர்களுக்கு, பெரியோர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. 

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி திசைகள்: கிழக்கு, தெற்கு நிறங்கள்: வெள்ளை, சிவப்பு எண்கள்: 1, 3 

பரிகாரம்: விநாயகப் பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். தடை நீங்கும். செல்வம் சேரும். 

 

கன்னி ராசி வாசகர்களே 

இந்த வாரம் வருமானத்தைச் சரியான வழியில் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். நண்பர்களிடமிருந்து தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர்ப் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம். 

தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் இருக்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வீண் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. 

பெண்களுக்கு, தாராளமாகப் பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். உற்சாகம் பிறக்கும். அரசியல்வாதிகளுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கேற்ற புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். 

கலைத் துறையினருக்கு, உங்கள் கவுரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். 

மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

 அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி திசைகள்: தெற்கு, தென்கிழக்கு நிறங்கள்: வெளிர்பச்சை, வெள்ளை எண்கள்: 5, 6 பரிகாரம்: காவல் தெய்வத்தை புதன்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை நீங்கும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close