[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 09:22 am
  • அ+ அ-

மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தந்தையின் உடல்நலம் சீராகும். விருந்தினர் வருகை உண்டு.

ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்காதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட வேண்டாம். வீடு பராமரிப்பு செலவு எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் வீண் விவாதங்கள் வந்து போகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வாகனத்தில் அதிக வேகத்துடன் செல்ல வேண்டாம். திடீர் பயணம் ஏற்படும்.

கடகம்: பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.

சிம்மம்: நீண்டநாட்களாக தள்ளிப் போன காரியங்களை இன்று முடிப்பீர்கள். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பணவரவு உண்டு.

கன்னி: புண்ணியத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். தடைபட்ட காரியங்களை சாதுர்யமாகப் பேசி முடிப்பீர்கள். வாகனச் செலவு நீங்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

துலாம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிறரிடம் கைமாற்றாக பணம் வாங்க வேண்டியது வரும்.

விருச்சிகம்: எதிர்பாராத சந்திப்பு நிகழும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயார் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.

தனுசு: குடும்பத்தினருடன் ஆலோசித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனம் இனி சீராகும்.

மகரம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தாருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு. ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.. நவீன கலைப்பொருட்கள் சேரும்.

மீனம்: உங்களின் எதார்த்தமான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குடும்பத்தினரின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள். பயணம் உண்டு. 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close