[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 09:09 am
  • அ+ அ-

மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். பண வரவு உண்டு.

ரிஷபம்: அநாவசிய பேச்சைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு ஏமாற்றம் ஏற்படக்கூடும்.

மிதுனம்: மறதி, சோம்பல் வந்து நீங்கும். விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

கடகம்: குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். தாயின் உடல்நிலை சீராகும். அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு பெருகும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்: பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பணவரவு உண்டு.

கன்னி: கணவன் - மனைவிக்குள் நிலவிய மனக்கசப்பு நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

துலாம்: உறவினர்கள், நண்பர்களுடன் வரம்பு மீறி பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவைப் பயன்படுத்துவது நல்லது. திடீர் பயணம் உண்டு.

விருச்சிகம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர் வகையில் ஆதரவு பெருகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

தனுசு: உறவினர், நண்பர்கள் உங்களைக் கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும்.

மகரம்: வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கும்பம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல், வீண்செலவு ஏற்படும். புது வேலை அமையும். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும்.

மீனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close