[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 11 Feb, 2019 09:24 am
  • அ+ அ-

மேஷம்: கடந்தகால சில கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது டென்ஷனாவீர்கள். எதிர்பாராத செலவுகளும், பயணங்களும் ஏற்பட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். சகோதரர் வகையில் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

மிதுனம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும். பண வரவு திருப்தி தரும்.

கடகம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்து கொடுப்பீர்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

சிம்மம்: எடுத்த காரியங்களை முடிக்க முடியாமல் அவதிப்பட்ட நிலை மாறும். தந்தையின் உடல்நிலை சீராகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

கன்னி: முன்கோபத்தால் பகை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். திடீர் பயணம் உண்டு.

துலாம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்: பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும். சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத்தொல்லை விலகும். கலைப்பொருட்கள் சேரும்.

தனுசு: துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரவு திருப்தி தரும். வழக்கு சாதகமாகும். விருந்தினர் வருகை உண்டு.

மகரம்: பிள்ளைகளின் விருப்பு வெறுப்புகளைத் தெரிந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். விலகி இருந்த சொந்தபந்தங்கள் விரும்பி வரும். பண வரவு உண்டு.

கும்பம்: அதிரடியாக சில திட்டங்களைத் தீட்டுவீர்கள். உங்களைத் தேடி வந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

மீனம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close