[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 08 Feb, 2019 09:16 am
  • அ+ அ-

மேஷம்: அலைச்சல் இருக்கும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. சில காரியங்கள் நீண்ட இழுபறிக்குப் பின்னர் முடியும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள். திடீர் பயணம் உண்டு.

ரிஷபம்: வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்களை வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவு உண்டு. தாய்வழி உறவினர்களுடன் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். அரசு அதிகாரிகளின் ஆலோசனைபடி சொத்து பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.

கடகம்: இழுபறியாக இருந்த காரியங்கள் முழுமையடையும். பிரபலமானவர்களின் ஆதரவு கிட்டும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

சிம்மம்: அலைச்சல், பணத்தட்டுப்பாடு வரக்கூடும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். எதிர்பாராத மருத்துவச் செலவுகள், வீண்பழிகள் வரக்கூடும். வாகனம் செலவு வைக்கும்.

கன்னி: பால்ய சிநேகிதர்களால் திருப்பம் ஏற்படும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. பிள்ளைகளுக்கு ஆடை ஆபரணங்களை வாங்கித் தருவீர்கள். சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும்.

துலாம்: பிரபலங்களின் நட்பு கிட்டும். சகோதர, சகோதரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.

விருச்சிகம்: கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வீண் குழப்பங்கள் நீங்கும். சமூகத்தில் பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பயணம் உண்டு.

தனுசு: அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். விலகியிருந்த பால்ய நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அளவுடன் பழகுவது நல்லது.

மகரம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர் வகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். முக்கிய பிரச்சினையில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும்.

மீனம்: எந்தக் காரியத்தையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. குடும்பத்தாருடன் மனம்விட்டுப் பேசுங்கள். அடுத்தவர் மனம் காயப்படும்படி எடுத்தெறிந்து பேசாதீர்கள். மனக் குழப்பம் ஏற்படும்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close