[X] Close

ராகு - கேது பெயர்ச்சி: ரேவதி நட்சத்திரப் பலன்கள்


raaghu-kedhu-peyarchi-revathi

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 10:48 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ரேவதி:

கிரகநிலை:

ராகு பகவான் உங்கள் எட்டாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

கேது பகவான் உங்கள் இருபத்தி இரண்டாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சுய கட்டுப்பாட்டுடன் இருக்கும் ரேவதி நட்சத்திர அன்பர்களே!

நீங்கள் தந்திரசாலி. பொறுமையுடன் இருந்து காரியங்களைச் சாதிப்பதில் வல்லவர். இந்த பெயர்ச்சியில் எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு வீணாகும்.

வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதேநேரத்தில் பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். குடும்பத்தில் இருந்த பிரச்சினை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து திருப்தியடைவீர்கள். அடுத்தவர்களுக்காக எந்தப் பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்.

பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பயணம் செல்ல நேரலாம்.

கலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதுர்யம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.

அரசியல் துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மனக்கவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மிக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.

தொழில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய சூழ்நிலை காணப்படும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற தடைகளைத் தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது.

பரிகாரம்: ஒவ்வொரு அமாவாசை தோறும் முன்னோர் வழிபாடு செய்து வர நன்மை ஏற்படும்.

மதிப்பெண்கள்: 87%

+ பொருள் வரத்து கூடும்.

- திடீர் செலவு உண்டாகும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close