[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 09:14 am
  • அ+ அ-

மேஷம்: விடாப்பிடியாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பெரிய பதவிகள் தேடி வரும். விருந்தினர் வருகை உண்டு. 

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள்.

கடகம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. மின்சாதனங்கள் பழுதாகும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

சிம்மம்: திடமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வர வேண்டிய பணம் வரும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. திடீர் பயணம் ஏற்படும்.

கன்னி: தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். பிரபலமானவர்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பண வரவு உண்டு.

துலாம்: உறவினர், நண்பர்கள் வீட்டு சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். வீடு, மனை வாங்குவீர்கள். கலை, இசை போன்றவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

விருச்சிகம்: நெடுநாட்களாகத் திட்டமிட்டிருந்த காரியம் கைகூடி வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விலையுயர்ந்த நகைகள், துணிமணிகள் வாங்குவீர்கள்.

தனுசு: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்து வேறுபாடு விலகும். புது வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்துகள் கைக்கு வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும்.

மகரம்: பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் பிரபலங்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். பிள்ளைகளின் கூடாப் பழக்கவழக்கம் விலகும்.

கும்பம்: உறவினர், நண்பர்களுடன் கருத்துவேறுபாடு, பண விரயம், முன்கோபம் ஏற்படும். அரசாங்க அதிகாரிகள் உங்களின் பொறுமையை சோதிப்பார்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

மீனம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். பிள்ளைகளால் வீண் அலைச்சல் ஏற்படும். அக்கம்பக்கத்தினரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடைவீர்கள்.

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close