[X] Close

ராகு- கேது பெயர்ச்சி: விசாக நட்சத்திரப் பலன்கள்


raghu-kedhu-visakam

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

  • kamadenu
  • Posted: 06 Feb, 2019 10:37 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விசாகம்:

கிரகநிலை:

ராகு பகவான் உங்கள் பத்தொன்பதாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

கேது பகவான் உங்கள் ஆறாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

அன்பும் பாசமும் கருணையும் ஒருங்கே அமையப் பெற்ற விசாக நட்சத்திர அன்பர்களே!

நீங்கள் மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்கள். இந்தப் பெயர்ச்சியில் உடல் அசதி ஏற்படலாம். மனதில் ஏதாவது கவலை  இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சின்னச்சின்னச் சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். பணவரத்து திருப்தி தரும். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதங்கள்  தரும்போது கவனமாக இருப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு இருப்பது போல் உணர்வார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம்.

குடும்பத்தில் சிறுசிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.  பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்து வந்த தடைகள் அகலும்.

பெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். மற்றவர்களிடம்  சில்லறை சண்டைகள் ஏற்படாமல் இருக்க கவனமாகப் பேசி பழகுவது நல்லது. அரசியல்வாதிகளைப் பொருத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த  மெத்தனப் போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும்போது கவனம் தேவை.

பரிகாரம்: மஞ்சள் வஸ்திரம் அணிவித்து நவக்கிரக குருவை வழிபடுவதால் மாற்றம் பெறுவீர்கள்.

மதிப்பெண்கள்: 76%

+ பணவரவு திருப்திதரும்.

- குடும்பத்தில் சின்னச்சின்ன சண்டைகள் உண்டாகலாம்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close