[X] Close

ராகு- கேது பெயர்ச்சி: சுவாதி நட்சத்திரப் பலன்கள்


raghu-kedhu-swathi

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

  • kamadenu
  • Posted: 06 Feb, 2019 10:27 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சுவாதி:

கிரகநிலை:

ராகு பகவான் உங்கள் இருபதாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

கேது பகவான் உங்கள் ஏழாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

காலம் தாழ்த்தாமல் எதையும் உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும் என்ற வேகம் கொண்ட சுவாதி நட்சத்திர அன்பர்களே!

நீங்கள் எடுக்கும் முடிவு மிகவும் ஆராய்ந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். இந்தப் பெயர்ச்சியில் திடீர் கோபம் ஏற்படலாம். மேலும் நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளிப் போடுவது நன்மை தரும்.

பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும்.

தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து இதமாக பேசுவது நல்லது.

கணவன் மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.  குழந்தைகள் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.

பெண்களுக்கு எந்தக் காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். பணவரத்து திருப்தி தரும்.

அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

பரிகாரம்: பானகம் நிவேதனம் செய்து நரசிம்மரை வழிபாடு செய்து வருவதால் நன்மை ஏற்படும்.

மதிப்பெண்கள்: 80%

+ பணவரத்து திருப்தி தரும்

- திடீர் கோபம் ஏற்படலாம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close