[X] Close

ராகு-கேது பெயர்ச்சி: உத்திரத்துக்கான பலன்கள்


raaghu-kedhu-utthiram

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 21:15 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

உத்திரம்:

கிரகநிலை:

ராகு பகவான் உங்கள் இருபத்தி மூன்றாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

கேது பகவான் உங்கள் பத்தாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

எந்தச் சூழ்நிலையிலும் கலங்காத மனம் கொண்ட உத்திர நட்சத்திர அன்பர்களே!

நீங்கள் மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் நிபுணர். இந்தப் பெயர்ச்சியில் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு நல்ல பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடிப் போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத் திறன் அதிகரிக்கும்.  நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசிப் பொழுதைக் கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும்.

தொழில் வியாபாரம் சிறப்பான  முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள்  மத்தியில்  மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு - சம்பள உயர்வு கிடைக்கலாம். பணியில் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான  பொருள்களை  வாங்குவீர்கள்.  கணவன் மனைவிக்கிடையே  மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின்  கல்வியில் கூடுதல் கவனம் தேவை. தங்க நகை சேரும்.

பெண்கள், நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும் மரியாதையும் கூடும். கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கியப் பொறுப்புகளில்  இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். சாதுர்யமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரியத் தடைகள் நீங்கும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.

அரசியல் துறையினருக்கு வாழ்க்கைத் தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.  முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்: சூரியனை வணங்க எல்லாக் காரியங்களும் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.

மதிப்பெண்கள்: 79%

+ அறிவுத் திறன் அதிகரிக்கும்.

- வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close