[X] Close

ராகு-கேது பெயர்ச்சி: பூசம் நட்சத்திரத்துக்கான பலன்கள்


raaghu-kedhu-poosam

ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள்

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 19:27 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பூசம்:

கிரகநிலை:

ராகு பகவான் உங்கள் இருபத்தி ஏழாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

கேது பகவான் உங்கள் பதினான்காம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

எப்போதும் விழிப்புடன் இருக்கும் பூசம் நட்சத்திர அன்பர்களே!

நீங்கள் மற்றவர் மத்தியில் உயர்ந்து நிற்பீர்கள். இந்தப் பெயர்ச்சியில் தைரியம் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம். நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனத்தெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் நல்ல நிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாகத் திறமை வெளிப்படும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் முதலான  சுபகாரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உறவினர்கள் மூலம் உங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும்.

பெண்களுக்கு மனோதைரியம் கூடும். சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியம் வெற்றிபெறும். கலைத்துறையினர், நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வீர்கள். போட்டிகள் மறையும்.

அரசியல் துறையினருக்கு கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பணவரத்து கூடும். மனக் குழப்பம் நீங்கும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். சின்ன விஷயத்துக் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். பணவரத்து உண்டாகும். வேற்று மொழி பேசும் நபரால்  நன்மை உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்விநிலை உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்:  தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் படிப்பதும் - நவக்கிரஹ குருவிற்கு மூக்கடலை மாலை (கொண்டைக்கடலை மாலை) அணிவித்து வழிபாடு செய்தும் வர எதிர்ப்புகள் அகலும்.

மதிப்பெண்கள்: 80%

+ மனத்தெம்பு உண்டாகும்

- கோபம் வரும். உஷார்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close