[X] Close

ராகு-கேது பெயர்ச்சி: மிருகசீரிஷத்துக்கான பலன்கள்


raghu-kedhu-mirugasirisham

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 13:43 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மிருகசீரிஷம்:

கிரகநிலை:

ராகு பகவான் உங்கள் மூன்றாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

கேது பகவான் உங்கள்  பதினேழாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

எதிர்ப்புகளையும், தடைகளையும் எதிர்த்து வீர நடை போடும் மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்களே!

இந்த ராகு கேது பெயர்ச்சியில் பணவரத்து அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் தக்க ஆலோசனையுடன் செய்வது நன்மையைத் தரும்.

தொழில் வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் வரவு கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நிதி பிரச்சினை நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எதையும் குழப்பத்துடனேயே செய்ய நேரிடும். சக ஊழியர்களிடம் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தைத் தரும். பயணங்கள் செல்லும் போது கவனம் தேவை. சகோதரர்களிடம்  கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

பெண்கள், எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாக காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சினைகளை கண்டால் ஒதுங்கிச் செல்வது நல்லது. முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

மாணவர்கள், கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க பாடுபட்டு படிப்பீர்கள்.

பரிகாரம்:  சுப்ரமணிய புஜங்கம் படிப்பதும் - சஷ்டி விரதம் இருப்பதும் சிறந்த பரிகாரம்.

மதிப்பெண்கள்: 78%

+ எதிர்பார்த்த உதவி கிடைக்கும்

- சகோதரர்களிடம்  கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close