[X] Close

ராகு-கேது பெயர்ச்சி: பரணிக்கான பலன்கள்!


raghu-kedhu-bharani

2019 ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 12:58 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பரணி:

கிரகநிலை:

ராகு பகவான் உங்கள் ஆறாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

கேது பகவான் உங்கள் இருபதாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

அனுபவ ஞானத்தைக் கொண்டும் சமயோசித சாமர்த்தியத்துடனும் செயலாற்றி காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் பரணி நட்சத்திர அன்பர்களே.

இந்த ராகுகேது பெயர்ச்சியில் அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். மனநிம்மதி உண்டாகும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும்.

குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.

பெண்களுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தைக் கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பணவரவு இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன்பு, ஒருமுறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்கத் தூண்டும். உஷார்.

வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வேலை தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.

பரிகாரம்:  காளி பூஜை செய்வதும் - நிகும்பலா யாகத்தில் கலந்து கொள்வதும் நன்மை தரும்.

மதிப்பெண்கள்: 85%

+ மனநிம்மதி உண்டாகும்

- அலைச்சல் இருக்கும்

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close