[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 09:41 am
  • அ+ அ-

மேஷம்: எதிரிகளை சரியான சமயத்தில் வீழ்த்துவீர்கள். வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும். தந்தை வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெற்றோர் உடல்நிலை சீராகும். 

ரிஷபம்: வீடு, மனை வாங்க சாதகமான வாய்ப்புகள் உருவாகும். வங்கிக் கடன் கிடைக்கும். இழுபறியாக இருந்த கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். வாகனத்தை சரிசெய்வீர்கள். 

மிதுனம்: பெற்றோர் உடல்நலத்தில் கவனம் தேவை. பயணத்தால் அலைச்சல், அசதி உண்டாகும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். எக்காரியத்திலும் நிதானம் தேவை. 

கடகம்: மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி திரும்பும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றுசேருவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். 

சிம்மம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். சவால், போட்டி, விவாதங்களில் கலந்துகொண்டு பரிசுகளை வெல்வீர்கள். முக்கியப் பிரமுகர்களின் நட்பும், அதனால் ஆதாயமும் உண்டாகும். 

கன்னி: வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வீடு கட்டும் பணிகள் நல்லபடியாக முடியும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சாதுர்யமாகப் பேசி பல காரியங்களை முடிப்பீர்கள். 

துலாம்: எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் மனோபலமும், வலிமையும் உண்டாகும். மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். 

விருச்சிகம்: எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியடையும். குடும் பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்கள் வார்த்தை, ஆலோசனையை எல்லோரும் கேட்டு நடந்துகொள்வார்கள். 

தனுசு: வீடு கட்டும் வேலை நல்ல விதத்தில் முடிவடையும். நவரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிரசித்த பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

 மகரம்: ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. நடந்துமுடிந்த சம்பவங்களைப் பற்றி பேசாமல், நடக்க வேண்டியதில் கவனம் செலுத்துங்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 

கும்பம்: திடீர் பயணங்கள், தூக்கமின்மை, வீண் செலவுகள் வந்துபோகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். வங்கி வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 

மீனம்: முக்கிய நபர்கள், அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். மனைவி வழியில் ஆதாயம், அனுகூலம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்கள் நல்ல மனதைப் புரிந்துகொள்வார்கள்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close