[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 04 Feb, 2019 09:03 am
  • அ+ அ-

மேஷம்: நம்பிக்கை, உற்சாகத் துடிப்புடன் செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். விருந்தினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும்.

 ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்த கசப்புணர்வு நீங்கும். கையில் பணப் புழக்கம் அதிகரிக்கும். பொருள் வரவும் உண்டு. 

மிதுனம்: சிலரது விமர்சனங்கள், கேலிப் பேச்சுக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் வளைந்துகொடுத்துப் போவது நல்லது. வீணாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். 

கடகம்: பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு நீங்கி அன்யோன்யம் பிறக்கும். வீண் கவலை, மனக் குழப்பங்கள் தீரும்.

 சிம்மம்: பங்குச் சந்தை வகையில் ஆதாயம் உண்டு. பழைய கடனை பைசல் செய்ய ஒருபுறம் யோசித்தாலும், மற்றொரு பக்கம் சொத்து வாங்க புது கடன் வாங்குவீர்கள். சிலர் வீடு மாறுவார்கள். 

கன்னி: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பேச்சில் பொறுமை அவசியம். 

துலாம்: வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டாகும். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். 

விருச்சிகம்: வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். 

தனுசு: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு பெறுவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர, சகோதரி வகையில் நன்மை பிறக்கும். 

மகரம்: பல வேலைகள் தடைபட்டு முடியும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் தலைதூக்கும். தர்மசங்கடமான சூழ்நிலை களில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். 

கும்பம்: திடீர் பயணத்தால் அலைச்சல், செலவு உண்டாகும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். பணப் பற்றாக்குறை இருந்தாலும், கைமாற்று வாங்கி சமாளிப்பீர்கள். 

மீனம்: நம்பிக்கை, சிந்தனைத் திறன் அதிகரிக்கும். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளை கள் உடல்நலம் சீராகும். பெற்றோர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close