[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 03 Feb, 2019 09:07 am
  • அ+ அ-

மேஷம்: கடின உழைப்பால் காரியங்களைச் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோசிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை வெற்றிகரமாக முடித்து காட்டுவீர்கள்.

ரிஷபம்: பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். விருந்தினர் வருகை உண்டு.

மிதுனம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் ஏற்படும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். பால்ய நண்பர் தக்க சமயத்தில் உதவுவார்.

கடகம்: வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய நகைகளை விற்று புதிய ஆபரணங்கள் வாங்குவீர்கள். விலகியிருந்த நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.

சிம்மம்: ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

கன்னி: வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கனிவான பேச்சால் காரியங்களைச் சாதிப்பீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு: குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அனுபவப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர்கள்.

மகரம்: வேலைச்சுமையால் சோர்வாகக் காணப்படுவீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அவ்வப்போது உடல்நிலை லேசாக பாதிக்கக் கூடும். 

கும்பம்: அலைச்சலும், திடீர் பயணங்களும், அத்தியாவசியச் செலவுகளும் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். 

மீனம்: வருமானம் உயரும். வருங்காலத் திட்டங்களில் ஒன்று பூர்த்தியாகும். கவுரவப் பொறுப்புகள் தேடி வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

 

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close