[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 01 Feb, 2019 08:49 am
  • அ+ அ-

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளைப் பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தில் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டியது வரும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். திடீர் பயணம் ஏற்படும்..

மிதுனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.

கடகம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். வேற்று மதத்தினரால் நன்மைகள் ஏற்படும். முன்கோபம், வீண் அலைச்சல் நீங்கும்.

சிம்மம்: கடனைப் பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வீடு, வாகனத்தைச் சீர்செய்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

கன்னி: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க முயலுங்கள்.

துலாம்: எதிர்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பயணம் மகிழ்ச்சி தரும்.

தனுசு: வேலைச்சுமையால் சோர்வாகக் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவைப் பயன்படுத்துவது நல்லது.

மகரம்: வாகனம் திடீரென செலவு வைக்கும். நவீன மின்சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். யாருக்கும் பணம், வாங்கித் தருவதில் தலையிட வேண்டாம். சுபச்செலவுகள் அதிகரிக்கும். 

கும்பம்: எண்ணம்போல் செயல்பட வேண்டும் என நினைப்பீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு காண்பீர்கள்.

மீனம்: மனதில் பட்டதைப் பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடு மறையும். பண வரவு திருப்தி தரும்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close