[X] Close

இந்த வாரம் இப்படித்தான்! (ஜன 31 முதல் பிப் 6ம் தேதி வரை) துலாம் முதல் மீனம் வரை


indha-vaaram-ippadithan

  • kamadenu
  • Posted: 31 Jan, 2019 09:33 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் பேச்சாற்றலால் சிக்கலான காரியங்களையும் சுமுகமாக முடிப்பீர்கள். வருமானத்தைச் சரியானபடி சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். தாமதம் நீங்கும். எதிரிகளால் தொல்லைகள் ஏற்பட்டு மறையும். புதிய நண்பர்களுடன் பழகும்போது எச்சரிக்கை அவசியம். தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன்கள், கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கப் பெற்று மேலதிகாரிகளால் அனுசரணையும் கிடைக்கும். பெண்களுக்கு, கோபத்தைக் குறைத்து நிதானமாகப் பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். அரசியல்வாதிகள் நற்பெயர் எடுப்பதற்குண்டான வழிகள் உண்டாகும். கலைத் துறையினருக்கு, சென்றமிடமெல்லாம் சிறப்பு இருக்கும். மாணவர்களுக்கு, ஆசிரியர்களின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாமல் போகலாம். விளையாட்டுகளில் ஈடுபடும்போது கவனம் தேவை.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி. l திசைகள்: மேற்கு, வடமேற்கு. l நிறங்கள்: வெள்ளை, வெண்பச்சை. l எண்கள்: 1, 6 l பரிகாரம்: வெள்ளிக்கிழமை விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாத்தி அர்ச்சனை செய்யவும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மகிழ்ச்சிக்காகப் பணம் செலவு செய்யத் தயங்க மாட்டீர்கள். நண்பர்களால் லாபம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நீங்கி நல்ல ஏற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் குறித்த கவலைகள் நீங்கும். குழந்தைகளால் நற்பெயர் ஏற்படும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு, மனத்தெளிவு உண்டாகும். சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, பலன்கள் நன்மை, தீமை எனக் கலந்து கிடைத்தாலும் சிறப்பாக இருக்கும். உறவினர்களின் ஆதரவு இருக்கும். கலைத் துறையினருக்கு, கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். மாணவர்களுக்கு, அதிகப் பொறுப்பும் அக்கறையும் தேவை.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன். l திசைகள்: வடக்கு, வடமேற்கு. l நிறங்கள்: வெள்ளை, மஞ்சள். l எண்கள்: 3, 9. l பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் முருகன் வழிபாடு செய்யுங்கள். 

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம். எடுத்த காரியம் கைகூடும். ஓய்வின்றிக் கடுமையாக உழைக்க வேண்டி வரலாம். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுகப் பிரச்சினைகள் மேலோங்கும். தேவையான பணவரவு இருக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். தொழில் பயணங்களால் லாபம் கிடைக்கப் பெறலாம். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு, காரியங்களில் இருந்த சிக்கல்கள் தீர்ந்து நினைத்தது நிறைவேறும். அரசியல்வாதிகள், கொடுத்த வாக்கை நிறைவேற்றப் பாடுபட வேண்டி இருக்கும். மேலிடத்தில் ஆதரவாக நடந்துகொள்வார்கள். கலைத் துறையினருக்கு, அனைத்துவிதமான வேலைகளிலும் பொறுமை தேவை. எச்சரிக்கையுடன் கையாண்டால் பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு, எதிலும் செயல் திறமை உண்டாகும். எச்சரிக்கையுடன் பழகுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன். l திசைகள்: கிழக்கு, வடகிழக்கு. l நிறங்கள்: l எண்கள்: 1, 3. l பரிகாரம்: நாகருக்கு பாலாபிஷேகம் செய்து பூஜை செய்யுங்கள். மாவிளக்கு போடுங்கள்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றப் பாடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பணதேவையைச் சரிகட்ட நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் இருக்கும். செய்த வேலைக்கு நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். புதிய தொழிலுக்கான வங்கிக்கடன் கிடைக்கும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் வழியில் நல்ல செய்தி வந்துசேரும். பெண்களுக்கு, வீண் வாக்குவாத்தைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, சிறந்த அறிவுரை கிடைக்கும். அதே நேரத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டியிருக்கும். கலைத் துறையினருக்கு, வெற்றி வாய்ப்புகளைப் பெறலாம். வெளிநாட்டுப் பயண வாய்ப்பு அமையும். துணிவும் பிறக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் புதிய வாய்ப்புகளைத் தருவார்கள். மனத்தில் தன்னம்பிக்கை உண்டாகும். 

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி. l திசைகள்: மேற்கு, தென்மேற்கு. l நிறங்கள்: நீலம், சிவப்பு. l எண்கள்: 6, 7. பரிகாரம்: சனிக்கிழமை விநாயகரை பூஜித்து அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிக அளவில் நடக்கும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்பாராத சுபச்செலவும் ஏற்படும். நகைகளைக் கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் நீங்கி வேலைகளில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் தலைதூக்கும். அருமையாகச் சமாளிப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு, தேவையற்ற மன அவசங்கள் இருக்கும். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். எல்லோரிடத்திலும் அன்பைப் பொழிவீர்கள். கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் குவியும். மாணவர்களுக்கு, ஆசிரியர் உதவி கிடைக்கும். தடை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், சனி. l திசைகள்: தெற்கு, தென்கிழக்கு. l நிறங்கள்: பச்சை, நீலம். l எண்கள்: 3, 8. l பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று 108 முறை வலம் வர வேண்டும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு இருக்கும். முன்கோபத்தைத் தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் இருந்த சிரமம் நீங்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவுவதில் மனநிம்மதி ஏற்படும். எதிர்ப்புகள் மறைந்து வெற்றி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியம். உத்தியோகத்தில் வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும்.  கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்ல வேண்டும். பெண்களுக்கு, மன நிம்மதி உண்டாகும். அரசியல்வாதிகள் எந்த ஒரு வேலையையும் திருப்தியாகச் செய்து முடித்துவிடுவீர்கள். எடுத்த முயற்சிகள் வெற்றிபெறும். கலைத் துறையினருக்கு, அனைத்து வகையிலும் தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு, பெரியோர்களை அனுசரித்துச் செல்வதுடன் மரியாதையையும் கொடுப்பீர்கள்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன். l திசைகள்: வடக்கு, வடமேற்கு. l நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்சு. l எண்கள்: 3, 6. l பரிகாரம்: வியாழக்கிழமை குரு வழிபாடு செய்ய நன்மைகள் உண்டாகும். பணவரவு கூடும். 

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close