[X] Close

இந்த வாரம் இப்படித்தான்! (ஜன 31 முதல் பிப் 6ம் தேதி வரை) மேஷம் முதல் கன்னி வரை


indha-vaaram-ippadithan

  • kamadenu
  • Posted: 31 Jan, 2019 09:29 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

 

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ஏராளமான நன்மைகள் நடக்கும். எந்த ஒரு வேலை பற்றியும் கவலை வேண்டாம். திடீர் பணத்தேவை உண்டாகலாம். வெளியூர் கடிதங்கள் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபார விவகாரங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்பட்டு பின்பு மறையும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளிடம் நன்மதிப்பும் அனுசரணையும் ஏற்படும். பெண்களுக்கு, பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, மனக்கஷ்டமும் தொந்தரவுகளும் அவ்வப்போது உண்டாகும். எதையும் தீர ஆலோசித்துச் செய்வது நல்லது. கலைத் துறையினருக்கு, பைனான்ஸ் நபர்களால் சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு, புதிதாக நட்பு வட்டாரங்கள் கிடைக்கும். அனைவரிடமும் மரியாதையுடன் பேசிப் பழகுவது நல்லது. விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளியூர் செல்லலாம்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி. l திசைகள்: கிழக்கு, தென்மேற்கு. l நிறங்கள்: சிவப்பு, மஞ்சள். l எண்கள்: 3, 9. l பரிகாரம்: முருகன் கோயிலுக்குப் போய் அரளிப்பூ அர்ப்பணித்து வர வேண்டும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்கள் திறமை வெளிப்படும். பணவரவை அதிகரிக்கப் பாடுபடுவீர்கள். விருப்பமானவர்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள். மனத்தெளிவுக்கான மார்க்கம் உண்டு. வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களாலும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளாலும் அனுகூலம் ஏற்பட்டாலும் ஒவ்வொரு வேலையிலும் கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் எச்சரிக்கை வியாபார விருத்திக்கு உதவும். பெண்களுக்கு, காரியத் தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரவு கூடும். அரசியல்வாதிகள், வாகனங்களைப் பயன்படுத்தும்போது, கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கலைத் துறையினருக்கு, முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு, தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி. l திசைகள்: வடக்கு, வடமேற்கு. l நிறங்கள்: பச்சை, கருநீலம். l எண்கள்: 3, 7. l பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தில் இருக்கும் தாயாரை வணங்கி வரத் துன்பங்கள் விலகும். 

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் வெளியூர் பயணங்கள் உண்டாகும். நிறைய பணம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கொஞ்சம் பதற்றத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பவர்கள். உத்தியோகத்தில் கோபப்படாமல் மேலதிகாரிகள் சொன்ன வேலையைச் செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள். சக ஊழியர்கள் பேச்சைக் கேட்டு நடப்பதைத் தவிர்க்கலாம். குடும்பத்தினரால் ஏற்பட்ட கவலை நீங்கும். உறவினர்களிடம் கருத்து வேற்றுமைகள் அகலும். பெண்களுக்கு, எதிரிகளும் நண்பராவார்கள். அரசியல்வாதிகளுக்கு, கட்சி மேலிடத்தின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். பிறருக்கு முன்ஜாமீன் போடும் முன்பு யோசியுங்கள். கலைத் துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், சனி. l திசைகள்: வடமேற்கு, வடக்கு. l நிறங்கள்: சிவப்பு, பச்சை. l எண்கள்: 3, 5. l பரிகாரம்: தினமும் பைரவரை வணங்கி எலுமிச்சம்பழ விளக்கேற்றி வழிபட வேண்டும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் போகலாம். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பீர்கள். கடன்கள் அனைத்தையும் அடைத்து விடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முட்டுக்கட்டைகளைக் களைவீர்கள். உத்தியோகஸ்தர்கள், மேலிடத்தில் இருப்பவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது அவசியம். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். உடன் பணிபுரிபவர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். பெண்களுக்கு, தாராளமாகப் பண வரவு இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு, ஏற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். புதிய கவலைகள் வந்து போகலாம். கலைத் துறையினருக்கு, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு, செய்வன திருந்தச் செய்யுங்கள். வெற்றி உண்டாகும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன். l திசைகள்: வடக்கு, வடகிழக்கு. l நிறங்கள்: வெள்ளை, பிரவுன். l எண்கள்: 2, 3. l பரிகாரம்: நரசிம்மரை வணங்கி வர வாழ்வில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் பெருமைகள் உண்டாகும் வாரம். வரவைப் போலவே செலவும் இருக்கும். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சலும் எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். பொறுப்புகள் அதிகமாகி நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரலாம். தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன் கிடைத்து நல்ல லாபமும் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் நெருக்கம் ஏற்பட விட்டுக் கொடுத்துப் போவது நன்மையைத் தரும். பெரியவர்களுடன் பேசும்போது மரியாதையைக் கடைப்பிடிக்க வேண்டும். பெண்களுக்கு, வீண் அலைச்சலும் செலவும் ஏற்பட்டாலும் மன நிம்மதி ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, தீவிர முயற்சிகளின் பேரில் நன்மைகள் உண்டாகும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு, தேவையான உதவிகள் கிடைக்கும். கவலையின்றிப் படிப்பீர்கள்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன். l திசைகள்: கிழக்கு, மேற்கு. l நிறங்கள்: சிவப்பு, மஞ்சள். l எண்கள்: 1, 3. l பரிகாரம்: தினசரி குலதெய்வத்தை வணங்கி வாருங்கள். நன்மைகள் நடக்கும். காரியத் தடை நீங்கும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி புதன் சஞ்சாரம் எல்லாவிதமான முன்னேற்றத்தையும் தரும். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட தூரத் தகவல்கள் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் செயல்திறன் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு, மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். கலைத் துறையினருக்கு, பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றைச் சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். 

l அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன். l திசைகள்: தெற்கு, தென்மேற்கு. l நிறங்கள்: பச்சை, வெளிர் நீலம். l எண்கள்: 5, 7. l பரிகாரம்: ஏழை, எளியோருக்கு உணவளியுங்கள். உடுப்பு தானம் அளியுங்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close