[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 31 Jan, 2019 09:10 am
  • அ+ அ-

மேஷம்: மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும்.

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். மனைவிவழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

மிதுனம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய சிக்கல்களுக்கு சுமுகத் தீர்வு காண்பீ்ர்கள். குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். 

கடகம்: முக்கிய வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். 

கன்னி: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் உண்டு. எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து நீங்கும். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

தனுசு: வாகனத்தை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம். உணவில் காரம், வாயு பதார்த்தங்களைத் தவிர்ப்பது நல்லது. சகோதரர் வகையில் சங்கடங்கள் ஏற்படக் கூடும்.

மகரம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பண வரவு உண்டு. திடீர் பயணம் ஏற்படலாம்.

கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நீண்டநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.

மீனம்: பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். புண்ணியத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். விலகி நின்ற உறவினர், நண்பர்கள் விரும்பி வருவார்கள்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close