[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 30 Jan, 2019 09:04 am
  • அ+ அ-

மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவைப் பயன்படுத்துவது நல்லது. விருந்தினர் வருகை உண்டு.

ரிஷபம்: நண்பர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வேற்று மொழி பேசுபவர்கள் உதவுவார்கள். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்: வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்ய வழி பிறக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினை சுமுகமாகும்.

கடகம்: விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.

சிம்மம்: குழப்பமான விஷயங்களில் தெளிவு பிறக்கும். திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வீடு வாங்குவது நல்ல விதத்தில் முடியும். கலைப் பொருட்கள் சேரும். 

கன்னி: திடீர் திருப்பம் உண்டாகும். பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.

துலாம்: பணவரவு உண்டு. பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு கட்டும் பணியில் இருந்த தேக்க நிலை மாறும்.

விருச்சிகம்: உங்களின் முன்கோபம் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. அரசு காரியங்கள் தாமதமாக முடியும். யாருக்கும் சாட்சி, உத்தரவாதக் கையெழுத்து போட வேண்டாம். 

தனுசு: எதிர்காலம் பற்றிய கவலைகள் அடிக்கடி வந்து போகும். ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அவதிப்படுவீர்கள். எதிர்பாராத பயணங்களால் வீண் அலைச்சல், செலவுகள் வந்து நீங்கும்.

மகரம்: புகழ், கவுரவம் உயரும். புது வேலை கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

கும்பம்:  புதிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தந்தைவழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். திடீர் பயணம் உண்டு.

மீனம்: உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளைத் தள்ளிப் போடாமல் உடனடியாக எடுப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close