[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 29 Jan, 2019 09:50 am
  • அ+ அ-

மேஷம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். பழைய பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். எதிலும் நிதானத்துடன் செயல்படுங்கள்.

ரிஷபம்: பேச்சில் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

மிதுனம்: பழைய நண்பர்கள் மூலம் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

கடகம்: பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தினரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவு ஏற்படும். திடீர் பயணம் உண்டு

சிம்மம்: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

கன்னி: தடுமாற்றம், மனக்குழப்பம் நீங்கும். எடுத்த காரியங்களை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்கிற வைராக்கியம் பிறக்கும். பூர்வீக வீட்டை புதுப்பிப்பீர்கள். பண வரவு உண்டு.

துலாம்: எதிர்காலத்தைப் பற்றிய கவலை அவ்வப்போது வந்து செல்லும். பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கவனிப்பது நல்லது. காரியங்களில் இருந்துவந்த மந்த நிலை நீங்கும்.

விருச்சிகம்: வீண் செலவு, அலைச்சல் வரும். அக்கம்பக்கத்து வீட்டாரிடம் அளவுடன் பழகுங்கள். குடும்பத்தில் வீண் விவாதங்களை வளர்க்காதீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

தனுசு: எதிலும் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பால்ய நண்பர் உதவுவார்.

மகரம்: திட்டமிட்டக் காரியங்கள் கைகூடும். உறவினர், நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். விருந்தினர் வருகை உண்டு.

கும்பம்: நெடுநாட்களாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பண வரவு உண்டு.

மீனம்: மனக் குழப்பம், அச்சம் நிலவும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மாலை முதல் மகிழ்ச்சிகரமான சூழல் ஏற்படும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close