[X] Close

தைரியமா கடன் வாங்குங்க!


jodhidam-arivom-2-9

கடனிலிருந்து மீட்கும் திருச்சேறை ருண விமோசன ஈஸ்வரர்

  • kamadenu
  • Posted: 29 Jan, 2019 08:55 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 – 9: இதுதான்… இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

முந்தைய பதிவில் விபரீத ராஜயோகம் உடைய ஜாதகர்கள் தாராளமாக  கடன் வாங்குங்கள் எனச் சொல்லியிருந்தேன்.

இது பலருக்கும் ஆச்சரியத்தையும் திகைப்பையும் உண்டாக்கியிருக்கும். காரணம்.... கடன் வாங்குவது எளிது, ஆனால்.... திரும்பச் செலுத்துவது    என்பது ?

வருமானம் என்பது அதாவது சம்பாத்தியம் நல்லா இருந்தால் கடன் வாங்கலாம், எப்போ வேலை போகும் என்று திக்... திக் னு இருக்கு நீங்க என்ன காமெடி பண்றீங்களா... என்று சிலர் கேட்கலாம்.

நீங்கள் வேலைக்குச் செல்பவரோ, சொந்தத் தொழில் செய்பவரோ எதுவானாலும் இருக்கட்டும். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை கவனமாக உணர்ந்து தெளியுங்கள். தைரியம் தானாக வரும். 

முதலில் வேலைக்குச் செல்பவர்கள் பற்றி:

 நீங்கள் வேலைக்கு முயற்சி செய்யும்போது எந்தத் தாமதமும் இல்லாமல் படிக்கும் போதோ அல்லது படிப்பை முடித்த உடனேயோ நிச்சயமாக வேலை கிடைத்திருக்கும்,

இந்த அமைப்பு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும், நீங்கள் நல்ல நிறுவனம் கிடைக்கும்வரை அல்லது சரியான ஊதியம் கிடைக்கும் வாய்ப்பு அமையும் வரை தாராளமாக வேலை மாற்றம் செய்து கொண்டே இருக்கலாம்,

அதாவது வேலை வாய்ப்பு என்பது உங்களைப் பொருத்தவரை மிக எளிய விஷயம் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

சொந்தமாகத் தொழில் புரிவோருக்கு:

செய்யும் தொழிலில் புதுப்புது முயற்சிகள், புதுப் புது கிளைகள் தொடங்குவது, ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் செய்வது என பலவிதமான முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையாகவே அமையும்.

இப்போது  கடன் விஷயத்திற்கு வருவோம். மேற்கண்ட இருதரப்பினருமே தாரளமாக கடன் வாங்கலாம். காரணம் கடன் வாங்கியே தன் நிலையை உயர்த்திக் கொள்ள முடியும்.

அதிலும் இந்த அவசர யுகத்தில் பொருளாதார சேமிப்பு என்பது இயலாத ஒன்று. கடன் வாங்கியே உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

கடன் வாங்குவதால் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது. மிக எளிதாக ஒரு கடனை அடைத்து மற்றொரு கடனை வாங்க முடியும்.

தொழில் வளர்ச்சியும், வாழ்க்கை வளர்ச்சியும் அமோகமாக இருக்கும்,

அதனால் தான் சொல்கிறேன்…

 " தாராளமாக கடன் வாங்குங்கள் , உங்கள் விபரீத ராஜயோகம் எந்த விதமான கடனையும் அடைத்து விடும்"

அப்படியே நோய் பற்றியும் பார்த்து விடுவோம்.

நோய் தாக்கம், அல்லது நீண்ட கால நோய்கள் என எதுவும் உங்களை அண்டாது. இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்கள் நீங்கள். எனவே நோய் பயம் தேவையே இல்லை.

இந்த விபரீத ராஜயோகம் மேலும் வலுப் பெறவும் மற்றும் இந்த யோகம் இல்லாதவரும் கீழ்கண்ட ஆலயங்கள் மற்றும் இறைவனை வணங்கி வர எல்லா பாக்கியமும் பெற்று இன்பமுடன் வாழலாம்.

கும்பகோணம் அருகில் உள்ள திருச்சேறை ருண விமோசன ஈஸ்வரரை வணங்கி வாருங்கள். விரைவில் கடன் தீரும். ருணம் என்றால் கடன் .

அடுத்து ரோகம் என்னும் நோய் தீர்க்கும் ஆலயம், சீர்காழி அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயங்களுக்குச் சென்று தரிசித்து வந்தால், நோய் தீரும். ஆரோக்கியம் பெருகும்!

சத்ரு என்னும் எதிரிகள் இல்லாத நிலை உண்டாக வேண்டும் என்பது வாழ்வில் மிக மிக முக்கியம்.

இதற்காக, இந்த நிலையை அடைவதற்காக, ஸ்ரீ முருகப் பெருமானையும் , தேய்பிறை அஷ்டமியில் ஸ்ரீகால பைரவரையும் வணங்கி வந்தால், எதிரிகளே இல்லாத நிலை உண்டாகும். எதிரிகள் வலுவிழந்து போவார்கள்.

 இன்னும் சில தகவல்களையும் மற்றுமொரு புதிய யோகத்தையும் அடுத்த அத்தியாயத்தில் பகிர்ந்துகொள்கிறேன்.

  • தெளிவோம்
  •  

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close